ரூ.4600 கோடி சொத்து மதிப்பு; ராணி போல் வாழும் இந்தியாவின் பணக்கார நடிகை யார் தெரியுமா?

Published : Feb 19, 2025, 01:04 PM IST

இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகைகளின் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், அதில் 4600 கோடி சொத்து மதிப்புடன் பிரபல நடிகை முதலிடம் பிடித்திருக்கிறார்.

PREV
14
ரூ.4600 கோடி சொத்து மதிப்பு; ராணி போல் வாழும் இந்தியாவின் பணக்கார நடிகை யார் தெரியுமா?
பணாக்கார நடிகை

சொத்துக்களில் முதலிடத்தில் இருக்கும் நடிகை யார் என்று யோசித்தால், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் அல்லது ஆலியா பட் போன்ற முகங்கள் தான் நம் நினைவுக்கு வரும். அதுவே தென்னிந்தியாவில் எடுத்துக்கொண்டால் நயன்தாரா, திரிஷா ஆகியோரின் பெயரைச் சொல்லலாம். ஆனால், அவர்களை மிஞ்சும் வகையில் ஒரு நடிகை 4 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா..  அதுதான் நிஜமும் கூட. 

24
ஜூஹி சாவ்லா சொத்து மதிப்பு

அந்த நடிகை வேறுயாருமில்லை... பாலிவுட் நாயகி ஜூஹி சாவ்லா தான். ஜூஹி சாவ்லா சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றது போலத் தான் தெரிகிறது. ஆனால், ஐபிஎல் அணி, உம்ஸ்தா நிறுவனத்தில் பங்குதாரர், திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் இணை உரிமையாளர் போன்ற பல வழிகளில் இன்றும் ஜூஹி சாவ்லாவுக்கு பெரிய வருமானம் கிடைக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்களில் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஜூஹி சாவ்லா. ஷாருக்கானின் நெருங்கிய தோழியான ஜூஹி சாவ்லாவுக்கு 4600 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்... கோடிகளில் சம்பளம்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு.. டாப் 10 தென்னிந்திய பணக்கார நடிகைகள் லிஸ்ட்..

34
அதிக சொத்து மதிப்பு கொண்ட டாப் 10 நடிகைகள்

அதிக சொத்துக்களை கொண்ட நடிகைகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஐஸ்வர்யா ராய் உள்ளார். ஜூஹி சாவ்லாவோடு ஒப்பிடும்போது ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு மிகவும் குறைவு. ஐஸ்வர்யாவின் சொத்து 860 கோடி. தற்போது சினிமாவில் சுறுசுறுப்பாக இல்லாவிட்டாலும், சம்பளத்தில் முன்னணியில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு பல விளம்பர பிராண்டுகளில் இருந்தும் வருமானம் கிடைக்கிறது. இவர் கடைசியாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

44
நயன்தாரா லிஸ்லயே இல்ல

மூன்றாவது இடத்தில் பிரியங்கா சோப்ரா உள்ளார். பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு 650 கோடி ரூபாய். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் நான்காவது இடத்தில் உள்ளார். ஆலியா பட்டுக்கு 500 கோடி சொத்துக்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து தீபிகா படுகோன் - 500 கோடி, கரீனா கபூர் - 485 கோடி, அனுஷ்கா சர்மா - 255 கோடி, மதுரி தீட்சித் - 250 கோடி, கஜோல் - 240 கோடி, கத்ரீனா கைஃப் - 225 கோடி என முதல் பத்து இடங்களை பாலிவுட் நடிகைகள் தான் ஆக்கிரமித்து உள்ளனர். அதன் பின்னரே நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகள் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... ரூ.200 கோடி சொத்து.. ஆடம்பர வீடுகள்.. பிரைவேட் ஜெட்.. தென்னிந்தியாவின் பணக்கார நடிகை இவங்க தான்..!

click me!

Recommended Stories