சென்னையில் தேவரா பிரஸ்மீட்... கொஞ்சும் தமிழில் பேசிய ஜான்வி கபூர்; மெர்சலான ரசிகர்கள்

Published : Sep 17, 2024, 10:04 PM ISTUpdated : Sep 18, 2024, 03:59 PM IST

 ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள, 'தேவரா' திரைப்படத்தின்... செய்தியாளர் சந்திப்பு நடந்த நிலையில்... அதில் ஜூனியர் என்.டி.ஆர் பிரபல தமிழ் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.  

PREV
15
சென்னையில் தேவரா பிரஸ்மீட்... கொஞ்சும் தமிழில் பேசிய ஜான்வி கபூர்; மெர்சலான ரசிகர்கள்
Devara Part 1

இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில். ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள திரைப்படம் தேவரா. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் வில்லனாக நடிக்கும் இந்த படத்தில், ஜூனியர் என்.டி.ஆர் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இளம் வயது Jr NTR-க்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க, மற்றொரு Jr NTR-க்கு ஜோடியாக நடிகை சுருதி மராத்தி நடித்துள்ளார். இவர்களை தவிர, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், நரேன், கலையரசன், முரளி சர்மா, அஜய், உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

25
Devara Cast

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து...  படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளதால்,  இந்த படத்தின் புரமோஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இன்று இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் கொரட்டல சிவா, தயாரிப்பாளர் கோசராஜு ஹரி கிருஷ்ணா, இசையமைப்பாளர் அனிருத், நடிகை ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர், கலையரசன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்த்திக்கு துரோகம்? பாடகியுடன் கோவாவில் தனி குடித்தனம்.. ஆடி காரால் பிடிபட்ட ஜெயம் ரவி நடந்தது என்ன?

35
Janhvi Kapoor About Mother Memories:

இதில் கலந்துகொண்டு பேசிய அனைவருமே நேரமின்மை காரணமாக மிகவும் குறைவான அளவில் பேசினர். படத்தின் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி என கூறி விடைபெற்றனர். 'தேவரா' படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகியுள்ள நடிகை ஜான்வி கபூர். தமிழில் பேசி அசத்தியது பலரையும் பிரமிக்க வைத்தது.

இவர் பேசுகையில்... "வணக்கம், உங்கள் எல்லோரையும் மீட் பண்ணுறது ரொம்ப சந்தோஷம். சென்னை எனக்கு மிகவும் ஸ்பெஷல். எங்க அம்மா கூட எனக்கு இருந்த நினைவுகள் எல்லாமே சென்னையில் தான். நீங்க அவங்க மேல காட்டின அன்பு தான் அதற்கு காரணம். அதற்கு நான் எப்போதுமே உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அதே அன்பை எனக்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன் என பேசினார். மேலும் இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்புக்காக படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜான்வி, கூடிய விரைவில் நேரடி தமிழ் படத்திலும் நடிப்பேன் என பேசி இருந்தார்.

45
Devara Movie Pillars

ஜான்வியை தொடர்ந்து பேசிய ஜூனியர் என்டிஆர்,  தனக்கு பிளைட்டுக்கு நேரம் ஆகிவிட்டதாக கூறி... பேச தொடங்கினார். சென்னை தனக்கு மிகவும் ஸ்பெஷல் தான். நான் குச்சுப்புடி பயின்றது சென்னையில் தான். அதனால் எனக்கு சென்னை எப்போதுமே சென்னையில் சில ஸ்பெஷல் நினைவுகள் உள்ளது. தேவரா உருவாக காரணம் என்னை சுற்றி இருக்கும் இந்த பில்லர்ஸ் தான். இயக்குனர் சிவா, இந்த படத்திற்காக போட்ட உழைப்பை நீங்க படத்தை பார்க்கும் போது உணர முடியும். அனிரூத் எனக்கும் அவருக்குமான பாண்டிங் பற்றி பேசி விட்டார். இனி அதை பற்றி நான் பேச முடியாது... அடுத்ததாக கலையரசன் இந்த படத்தில் ஒரு தெலுங்கு நடிகராகவே மாறி நடித்துள்ளார். இந்த படத்தில் அவரின் பெயர் குஞ்சரா என தெரிவித்தார். 

ஆள விடு சாமி; 16 மணிநேரம் பாடாய் படுத்திய டி.ராஜேந்தர்.. தப்பி ஓடிய எஸ்.பி.பி! எந்த பாட்டுக்கு தெரியுமா?

55
Junior NTR About Favorite Tamil director

இறுதியாக ஜான்வி கபூர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என கூறிய ஜூனியர் NTR-யிடம் தொகுப்பாளினி அஞ்சனா, நீங்கள் தமிழில் எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என கேட்டதும், இயக்குனர் வெற்றி மாறன் பெயரை கூறிய ஜூனியர் என்.டி.ஆர்... சார் சீக்கிரம் எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க, நான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்றும், அந்த படத்தை நாம் தமிழில் கூட எடுத்து, தெலுங்கில் டப் செய்து கொள்ளலாம் என தெரிவித்து ஆச்சர்யப்படுத்தினார். எனவே கூடிய விரைவில் வெற்றி மாறன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories