
தென்னிந்திய திரை உலகில் முன்னணி பாடகராக அறியப்படுபவர் எஸ் பி பாலசுப்ரமணியம். பாடும் நிலா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், பாடகர் என்பதை தாண்டி நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், ப்ரொடியூசர், என பன்முக திறமையாளராகவும் அறியப்பட்டவர். மேலும் பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ, போன்ற ஏராளமான விருதுகளுக்கும் சொந்தக்காரர் எஸ்.பி.பி. இவருடைய கணீர் குரலுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளை தாண்டி ஹிந்தி, போஜ்புரி, அசாமி, உள்ளிட்ட சுமார் 16 மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
அதே போல் ஒரே நாளில் 28 பாடல்களை பாடிய பெருமை இவருக்கு உள்ளது. ஆனால் இவரையே ஒரே ஒரு பாடலுக்காக 16 மணி நேரம் பாடாய் படுத்தி உள்ளார் டி. ராஜேந்தர். தமிழ் சினிமாவின் ஆல்ரவுண்டராக பார்க்கப்படுபவர் டி.ராஜேந்தர். நடிகர், பாடகர், இசை அமைப்பாளர், ஒலிப்பதிவாளர், இயக்குனர், பாடல் ஆசிரியர், என பன்முக திறமையாளரான இவர்... 'ஒருதலை ராகம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படம் 1980 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
புதிய தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து 52-வது படத்திற்கு அஸ்திவாரம் போட்ட தனுஷ்!
இதை தொடர்ந்து வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், நெஞ்சில் ஒரு ராகம், தேடும் பல்லவி, உயிர் உள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், உறவைக்காத்த கிளி, மைதிலி என்னை காதலி, என பல படங்களை இயக்கி, சில படங்களில் இவரே ஹீரோவாகவும் நடித்தார். அதேபோல் அமலா, நளினி, ஜீவிதா, மும்தாஜ், போன்ற நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். மலையாள திரை உலகில் சமீபத்தில் பூகம்பத்தை ஏற்படுத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான போது, நளினி, நடிகை விசித்ரா, போன்ற நடிகைகள் திரை உலகில் ஜென்டில்மேன் என்றால் அவர் டி ராஜேந்தர் என குறிப்பிட்டு கூறி இருந்தனர். தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகைகள் மீது விரல் கூட படாமல் நடிப்பவர். அதேபோல் இவர் எடுக்கும் படங்கள் அனைத்துமே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கக் கூடிய வகையில் ஜனரஞ்சகமாக இருக்கும். குறிப்பாக ஆபாச காட்சிகள் துளியும் இருக்காது. சென்டிமென்ட் காட்சிகளால் பல ரசிகர்கள் நெஞ்சை கவர்வது இவருக்கு கைவந்த கலை என கூறலாம்.
இவர் பிரபல பாடகர் எஸ் பி பி-யை 16 மணி நேரம் பாடவைத்து தகவல் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். டி ராஜேந்தர் இசையமைத்து - இயக்கிய பல படங்களில் எஸ்பிபி ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அந்த வகையில் டி ராஜேந்தர் இயக்கி, நடித்து, இசையமைத்து, இவருடைய ஒளிப்பதிவில் வெளியான திரைப்படம் தான் 'மைதிலி என்னை காதலி' இந்த படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம் பெற்ற நிலையில், அனைத்து பாடல்களையும் டி ராஜேந்தர் தான் எழுதியிருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற எட்டு பாடல்களை பாடல்களை எஸ்பிபி பாடி இருந்தார்.
தமிழ் சினிமா நடிகைகளின் Xerox போல் இருக்கும் 7 சீரியல் ஹீரோயின்கள்!
இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் தான், 'நானும் உந்தன் உறவை' என்கிற பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளரான டி ராஜேந்தர் இப்பாடலை எஸ்பிபி இடம் பாடி காட்டி... சுமார் ஏழு முறை இந்த பாடலை ரெக்கார்டிங் செய்த நிலையில், டி. ராஜேந்தருக்கு திருப்தி ஏற்பட வில்லையாம். அவர் எதிர்பார்த்த ஏதோ ஒன்று மிஸ் ஆகியுள்ளது. 16 மணி நேரம் தொடர்ந்து இந்த பாடலுக்காக மெனக்கட்டு பாடிய எஸ் பி பி-யின் கால்ஷீட் டைம் முடிந்து, இரவு 12 மணி ஆகிவிட்டதாம். டி ராஜேந்தர் எப்படியும் அந்த பாடலை முடிக்க வேண்டும் என்கிற முனைப்பில்... தயங்கியபடியே பாலு சார் இன்னும் ஒரே ஒரு முறை ரெக்கார்டிங் போலாமா என கேட்க... "இனிமே என்னால முடியாது... என கூறிவிட்டு, அப்போதைக்கு டி.ராஜேந்தரிடம் இருந்து தப்பித்து சென்றுள்ளார். மேலும் நான் பாடியதை கேட்டு பாருங்கள். உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் காலையில் வருகிறேன் என கூறி உள்ளார். பின்னர் மீண்டும் மறுநாள் ரெக்கார்டிங் செய்து டி.ராஜேந்தருக்கு திருப்திகரமாக ஆன பின்னரே இந்த பாடல் படத்தில் இடம்பெற்றதாம். பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.