புதிய தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து 52-வது படத்திற்கு அஸ்திவாரம் போட்ட தனுஷ்!

Published : Sep 17, 2024, 03:57 PM IST

நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்க உள்ள, 52-ஆவது படத்தை Dawn பிச்சர்ஸ்-ல் நடிக்க உள்ளதாக தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளது.  

PREV
14
புதிய தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து 52-வது படத்திற்கு அஸ்திவாரம் போட்ட தனுஷ்!
Dhanush Raayan

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 50-ஆவது படமான 'ராயன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து.. தன  கைவசம் உள்ள படங்களை நடித்து முடிப்பதில் மட்டுமின்றி, திரைப்படங்களை இயக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தன்னுடைய சகோதரியின் மகனை வைத்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில், அனிதா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்க மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

24
Actor Dhanush to direct this hero report

அண்மையில் இந்த படத்தில் தனுஷின் மகன் எழுதிய பாடல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த பாடலுக்கு பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடனம் ஆடி இருந்தார். இதைத்தொடர்ந்து தன்னுடைய தனுஷ் நான்காவதாக இயக்க உள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படம் ஒரு புதுமையான கதைக்களத்தில் தனுஷ் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, நடிகர் அருண் விஜய் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஹீரோவுக்கு நிகரான முக்கியத்துவம் வில்லன் கதாபாத்திரத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ளதால் தான் இந்த படத்தில் அருண் விஜய் நடிக்க சம்மதித்தாராம்.

தமிழ் சினிமா நடிகைகளின் Xerox போல் இருக்கும் 7 சீரியல் ஹீரோயின்கள்!

34
Actor Dhanush Action Movie

பக்கா ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின், பட்ஜெட் மட்டுமே சுமார் 120 கோடி என கூறப்படுகிறது. இந்த படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்க உள்ளார். கூடிய விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள்  வெளியாகும் என கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தற்போது தனுஷின் 52-ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பை, 'Dawn பிச்சர்ஸ்' நிறுவனர் ஆகாஷ் பாஸ்கர் அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளார். 
 

44
Dhanush 52 Movie

இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, 'Dawn Pictures' நிறுவனத்தின் மூலம் எங்களுடைய மதிப்பு மிக்க முதல் படத்தின் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் முதல் தயாரிப்பு D52, நடிப்பு அசுரன் தனுஷின் நடிப்பில் உருவாக உள்ளது. எண்களின் இந்த அற்புதமான பயத்தில்... எங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்பளித்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடிகர் தனுஷின் 52-ஆவது படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்யப்பட்டு விட்டதால்... விரைவில் இயக்குனர் உள்ளிட்ட மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆள் மயக்கி.. பிரியங்கா வாழ்க்கை பறிபோக இதுதான் காரணமா? பயில்வான் ரங்கநாதன் கூறிய பகீர் தகவல்!
 

Read more Photos on
click me!

Recommended Stories