விடாமுயற்சி vs குட் பேட் அக்லி! ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா 2 அஜித் படங்கள்?

First Published | Sep 17, 2024, 3:00 PM IST

Vidaamuyarchi vs Good Bad Ugly : அஜித்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதாம்.

Vidaamuyarchi, Good Bad Ugly

நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. இதில் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் அஜித்துடன் திரிஷா, ரெஜினா கசெண்ட்ரா, அர்ஜுன், ஆரவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

Vidaamuyarchi

அதேபோல் அஜித் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படத்தின் பெயர் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்னர் த்ரிஷா இல்லேனா நயன்தாரா, மார்க் ஆண்டனி போன்ற வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... சைந்தவியை பிரிந்த ஜிவி பிரகாஷ்... மகனின் விவாகரத்து பற்றி மனம்திறந்த ஏ.ஆர்.ரெஹானா

Tap to resize

Good Bad Ugly

இந்த இரண்டு படங்களில் விடாமுயற்சி படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கினாலும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் படக்குழு சீக்ரெட்டாகவே வைத்திருக்கிறது. முதலில் இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தீபாவளி ரேஸில் நிறைய படங்கள் உள்ளதால் அதில் இருந்து விலகியது. இதையடுத்து நவம்பர் மாதம் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளதால், விடாமுயற்சி படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர்.

Vidaamuyarchi vs Good Bad Ugly

ஆனால் அந்த சமயத்தில் ஷங்கரின் பிரம்மாண்ட படமான கேம் சேஞ்சர் ரிலீஸ் ஆவதால் விடாமுயற்சி பொங்கலுக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் குட் பேட் அக்லி படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால், அவர்களும் பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இரண்டு படங்களும் விட்டுக்கொடுக்க மறுத்தால், பொங்கலுக்கு அஜித் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா கன்பார்ம்.

இதையும் படியுங்கள்... ஒரு வருடத்தில் 21 படமா! ஒரே ஆண்டில் அதிக படங்களில் நடித்த தமிழ் ஹீரோஸ் லிஸ்ட் இதோ

Latest Videos

click me!