Pariyerum Perumal
தமிழ் சினிமாவில் நல்ல பல திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் ராம். அவருடைய இயக்கத்தில் வெளியான பிரபல நடிகர் ஜீவாவின் "கற்றது தமிழ்" என்கின்ற திரைப்படத்தில், ஒரு சிறு கதாபாத்திரம் நடித்து அதன் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கியவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். தொடர்ச்சியாக இயக்குனர் ராமின் பல திரைப்படங்களில் அவருடைய உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த மாரி செல்வராஜ் முதல் முறையாக இயக்குனராக உருவெடுத்த திரைப்படம் தான் "பரியேறும் பெருமாள்".
கடந்த 2018ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீளம் ப்ரொடக்ஷன் நிறுவனம் தான் தயாரித்து வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் படமே வெற்றிப்படமாக மாறிய நிலையில், தொடர்ச்சியாக தமிழ் திரை உலகில் நல்ல பல திரைப்படங்களை இயக்க தொடங்கினார் மாரி செல்வராஜ்.
புதிய தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து 52-வது படத்திற்கு அஸ்திவாரம் போட்ட தனுஷ்!
Karnan Movie
பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பிறகு சுமார் மூன்று ஆண்டுகால இடைவெளியில் இயக்குனர் மாரி செல்வராஜ் உருவாக்கிய திரைப்படம் தான் "கர்ணன்". பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷுடன் இணைந்த முதல் திரைப்படமிது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த திரைப்படத்தில் எமராஜா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல மலையாள திரை உலக நடிகர் லால், தன்னுடைய அசாத்திய நடிப்பால் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்றே கூறலாம். இந்த படத்திற்கு பிறகு தான், பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய வாழ்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை கொண்டு தான், தனது படங்களை இயக்கி வருகின்றார் என்பது தெரியவந்தது.
Maamannan Movie
தன்னுடைய முதல் இரண்டு திரைப்படங்களுக்கு சுமார் மூன்று ஆண்டுகால அவகாசம் எடுத்துக் கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ், கர்ணன் திரைப்படத்துக்கு பிறகு இரண்டே ஆண்டுகளில் தனது மூன்றாவது திரைப்படத்தை தமிழ் திரையுலகில் வெளியிட்டார். ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் காமெடியின் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கும் வடிவேலுவை, அதுவரை யாரும் பார்த்திராத ஒரு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மாரி செல்வராஜ் நடிக்க வைத்திருந்த திரைப்படம் தான் "மாமன்னன்".
உண்மையில் இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, நடிகர் மற்றும் அரசியல் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்ட பலரது நடிப்பு முற்றிலும் மாறுபட்டு காணப்பட்டது. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினே தயாரித்து வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர் ரகுமானின் இசை இந்த திரைப்படத்திற்கு மற்றொரு பலமாக அமைந்த நிலையில், சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலக அளவில் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது.
Vaazhai Part 2
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி உலக அளவில் வெளியாகி, இப்போது வரை மிகச் சிறந்த திரைப்படமாக திகழ்ந்து வருகிறது மாரி செல்வராஜன் நான்காவது திரைப்படமான "வாழை". வாழைக்குலை சுமக்கும் தொழிலை தான் சிறுவயதில் செய்து வந்ததாகவும், அப்படியே தன்னுடைய வாழ்க்கையை இந்த திரைப்படத்தில் சித்தரித்து இருப்பதாகவும் மாரி செல்வராஜ் கூறினார். படம் பார்த்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான் விரைவில் தான் உருவாக்க உள்ளதாகவும் அது இன்னும் பயங்கரமாக இருக்கும் என்றும் அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
மேலும் பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து "பைசன்" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி vs குட் பேட் அக்லி! ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா 2 அஜித் படங்கள்?