மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கலங்கிய கண்களோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கிரிசில்டா, அந்த வீடியோவில், என் குழந்தையின் சாபம் உன்னை சும்மா விடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கிரிசில்டாவுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் புதியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கிரிசில்டா அதில், “என் குழந்தை தற்போது ஐசியுவில் உள்ளது. ஆனால் எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நீ ஊர் சுற்றுகிறார். உன்னிடம் யாரும் எந்தவிதமான கேள்வியும் எழுப்புவது கிடையாது. இந்த குழந்தையின் சாபம் உன்னை சும்மா விடாது.
24
ஆதாரங்களை வெளிப்படுத்தினால் அசிங்கமாகிவிடும்
என்மீது மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளாய். அதோடு சேர்த்து டிஎன்ஏ பரிசோதனைக்கும் அனுமதி வாங்கிவிட்டு வா. தற்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் 7 நாட்களில் முடிவு தெரிந்துவிடும். நீ என்னுடன் 2 ஆண்டுகள் எப்படி வாழ்ந்தாய் என்பது உனக்கு தெரியும். அதனை பொதுவெளியில் வெளிப்படுத்தினால் அசிங்கமாகிவிடும் என்பதால் நான் பொறுமையாக உள்ளேன்.
34
மிரட்டி கல்யாணம் செய்தேனா..?
நான் மிரட்டி திருமணம் செய்துகொண்டதாக ரங்கராஜ் சொல்கிறார். ஆனால் அவரது மனசாட்சிக்கு தெரியும் அது எவ்வளவு பொய் என்று. அவர் எனக்கு அனுப்பிய பல மெசேஜ் என்னிடம் உள்ளது. அதில் அவர் அவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பார். அந்த வீடியோகளை குழந்தைகளிடம் காட்டினால் கூட அவர்களே மாதம்பட்டி மகிழ்ச்சியுடன்தான இருக்கிறார் என சொல்லிவிடுவார்கள்.
செல்வாக்குமிக்க நபராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தனது செல்வாக்கை பயன்படுத்தி வழக்கை திசை திருப்புகிறார். நான் எந்த காவல் நிலையத்திற்கு சென்றாலும் அவரது செல்வாக்கை பயன்படுத்தி வழக்கை மாற்றிவிடுகிறார். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. யூடியூபர்களுக்கு பணம் கொடுத்து எனக்கு எதிராக பேச வைக்கிறார்.
மேலும் அது என்னுடைய குழந்தையாக இருந்தால்..? அப்படினு சொல்ற. அது உன் குழந்தை இல்லாம யார் வீட் குழந்தை..? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.