விஜய் பாடிய கடைசி பாடல்... தூள் கிளப்பும் ஜனநாயகன் பர்ஸ்ட் சிங்கிள் ‘தளபதி கச்சேரி’ சாங் இதோ

Published : Nov 08, 2025, 06:09 PM IST

தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான தளபதி கச்சேரி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

PREV
14
JanaNayagan First Single Thalapathy Kacheri Song Released

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகரான விஜய்யின் 69-வது திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். பீஸ்ட் படத்திற்கு பின்னர் விஜய்யும், பூஜாவும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் இதுவாகும். இப்படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.275 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதற்கு முன்னர் கத்தி, மாஸ்டர், லியோ, பீஸ்ட் போன்ற விஜய் படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், தற்போது ஜனநாயகன் மூலம் ஐந்தாவதாக கூட்டணி அமைத்துள்ளார்.

24
விஜய்யின் கடைசி படம்

ஜனநாயகன் தான் நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ளார் விஜய். இதையடுத்து அரசியலில் ஈடுபட உள்ளதால், இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்து இருக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதில் விஜய் உடன் பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டு பொங்கல் விடுமுறையில் ஜனநாயகன் ரிலீஸ் ஆக உள்ளது.

34
ஜனநாயகன் பிசினஸ்

ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதே அதன் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் சூடுபிடித்துள்ளது. அதன்படி அமேசான் பிரைம் நிறுவனம் ஜனநாயகன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை 110 கோடிக்கு கைப்பற்றி உள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா திரையரங்க உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.115 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாம். மேலும் இப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் ரூ.35 கோடிக்கு வாங்கி இருக்கிறது. இதன்மூலம் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மட்டும் ரூ.260 கோடிக்கு மேல் நடந்திருக்கிறது.

44
ஜனநாயகன் பர்ஸ்ட் சிங்கிள்

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை இன்று ரிலீஸ் செய்துள்ளனர். தளபதி கச்சேரி என்கிற அப்பாடலை நடிகர் விஜய் தான் பாடி இருக்கிறார். விஜய்யின் கெரியரில் அவர் பாடிய கடைசி பாடலாக இது அமைந்துள்ளது. இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்பாடல் வரிகளை தெருக்குரல் அறிவு எழுதி இருக்கிறாராம். இப்பாடலுக்கு நடிகர் விஜய் அசத்தலாக நடனமாடி இருக்கிறார். இப்பாடலுக்கு சேகர் மாஸ்டர் தான் டான்ஸ் கொரியோகிராஃபராக பணியாற்றி இருக்கிறார். கேட்டவுடன் பிடிக்கும் வகையில் இருப்பதால், அடுத்த ஒரு மாதத்திற்கு இன்ஸ்டாகிராமில் தளபதி கச்சேரி பாடல் தான் ஆக்கிரமித்திருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories