மாதம்பட்டி ரங்கராஜும் தானும் திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் படு வைரல் ஆனது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மறுநாளே தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த ஆண்டு தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ளதாகவும் பகீர் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் ஜாய் கிரிசில்டா. இந்த திருமணம் பற்றி ஜாய் தொடர்ந்து பதிவுகள் போட்டு வந்தாலும் மறுபுறம் மாதம்பட்டி ரங்கராஜ் வாய்திறக்காமல் மெளனம் காத்து வருகிறார்.
24
சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவரின் முதல் மனைவி பெயர் ஸ்ருதி ரங்கராஜ். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஒரு சர்ச்சை எழுந்தபோது, நான் தான் அவரின் மனைவி என்று குறிப்பிட்டு அவருடன் குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார் ஸ்ருதி. அப்படி இருக்கையில் ஸ்ருதிக்கு விவாகரத்து கொடுக்காமல் ஜாய் கிரிசில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துகொண்டாரா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது. இதனால் அவருக்கு கடும் சிக்கலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
34
கப்சிப்னு இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்
திருமணம் பற்றி ஜாய் கிரிசில்டா தொடர்ந்து பதிவுகளை போட்டு வருவது மாதம்பட்டி ரங்கராஜை பிளாக் மெயில் செய்யத் தான் என்கிற பேச்சும் சோசியல் மீடியாவில் அடிபடுகிறது. மேலும் அவர்கள் இருவரும் பல மாதங்களுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டு அவரை ஜாய் கிரிசில்டா மிரட்டி வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதைப்பற்றி விளக்கம் அளிக்காமல் மாதம்பட்டி ரங்கராஜ் கப்சிப்னு இருப்பதால் அவரைப் பற்றி பல தகவல்கள் இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக இந்த விவகாரம் பற்றி எந்தவித பதிவும் போடாமல் இருந்த ஜாய் கிரிசில்டா தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சில பயணம் அமைதியாக தொடங்கி, நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு செல்லும். அதேபோலதான் நாங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவன் - மனைவியாக அன்போடும், ஒருமித்த மனதோடும் எங்களது பயணத்தை தொடங்கினோம். இந்த ஆண்டு ஆழமான காதலோடு எங்களின் குழந்தையை வரவேற்க தயாராகி வருகிறோம் என பதிவிட்டு இருக்கிறார். அதில் கடந்த சில வருடங்களாகவே தாங்கள் கணவன் - மனைவியாக வாழ்ந்து வருவதாக ஜாய் கிரிசில்டா குறிப்பிட்டுள்ளது பேசு பொருள் ஆகி வருகிறது.