மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி வரும் ஜாய் கிரிசில்டா, தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவரை குறிப்பிட்டு போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற சமையல் கலைஞராக வலம் வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ், அரசியல்வாதிகள், முன்னணி நடிகர்கள் என யார் வீட்டு திருமணமாக இருந்தாலும் அவர்கள் முதலில் அழைக்கும் நபராகவும் மாதம்பட்டி ரங்கராஜ் இருக்கிறார். அந்த அளவுக்கு கேட்டரிங் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் இவர், கடந்த சில மாதங்களாகவே தொடர் சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். இதற்கு முக்கிய காரணம் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா தான். இவர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் பர்சனல் ஸ்டைலிஷ்ட் ஆக பணியாற்றி இருக்கிறார்.
24
ஜாய் கிரிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் கல்யாணம்
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், அவர் கடந்த 2023ம் ஆண்டு முதல் ஜாய் கிரிசில்டாவுடன் லிவ்விங் டுகெதராக வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார். இவர்கள் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, தன்னுடைய வயிற்றில் மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தை வளர்கிறது எனவும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இந்த விவகாரம் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் வாய்திறக்கவே இல்லை.
34
புகார் அளித்த ஜாய் கிரிசில்டா
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கூறி ஜாய் கிரிசில்டா கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இதையடுத்து தன்மீது அவதூறு பரப்பும் விதமாக ஜாய் கிரிசில்டா பேசுவதற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தார் மாதம்பட்டி, ஆனால் கோர்ட் அதற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. அண்மையில் மாநில மகளீர் ஆணையத்திலும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தார் ஜாய் கிரிசில்டா. அவர் தன்னைப்போல் மேலும் 10 பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டார் ஜாய்.
இந்த நிலையில், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜை டேக் செய்து பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் ஜாய் கிரிசில்டா. அந்த பதிவில், ஹலோ டேடி, ஆரம்பிக்கலாமா? பேபி ரஹா ரங்கராஜ் வர இன்னும் சில வாரங்கள் தான் இருக்கிறது. இப்படிக்கு உங்கள் வாரிசு மாதம்பட்டி ரஹா ரங்கராஜ் என தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தை அவருக்கு சொல்வது போல் ஒரு பதிவை போட்டிருக்கிறார் ஜாய் கிரிசில்டா. அவரின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் மாதம்பட்டியை கதறவிடுறீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.