சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவுடன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார்.
சமையல் உலகில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியவர் மாதம்பட்டி ரங்கராஜ். 2019ஆம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்கஸ் படத்தின் மூலம் அவர் நடிகராக அறிமுகமானார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் படங்களின் மூலம் மாதம்பட்டி ரங்கராஜ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார்.
25
ரங்கராஜ் குடும்ப பிரச்சனை
ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் மாதம்பட்டி ரங்கராஜ் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்றே கூறலாம். அவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியுடன் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில காலமாகவே அவர் தனது மனைவியிடம் இருந்து பிரிந்து, ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்பட்டது. ஜாய் கிரிசில்டா, 2018ஆம் ஆண்டு இயக்குநர் ஜெ.ஜெ. பெட்ரிக்கை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2023ல் அந்த உறவு முறிந்து விட்டது.
35
மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி
சமீபத்தில் ஜாய் கிரிசில்டா, ரங்கராஜுடன் தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தார். அதோடு, தானும் 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் அவர் பதிவிட்டார். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ், தனது முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் முடிந்தது என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் சில நாட்களுக்குப் பிறகு, மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து ஜாய் கிரிசில்டாவுடன் எடுத்திருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.
இந்தச் சூழலில், ஜாய் கிரிசில்டா நேரடியாக சென்னையில் உள்ள காவல் ஆணையரகத்தை அணுகி புகாரளித்துள்ளார். அந்த புகாரில், “நான் ரங்கராஜின் மனைவி. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம். இப்போது அவர் என்னை ஏமாற்றி விட்டார். எங்களுடைய குழந்தைக்கும் எனக்கும் நீதி வேண்டும். MRC நகரில் உள்ள கோவிலில் தான் திருமணம் நடைபெற்றது ” என்று தெரிவித்துள்ளார்.
55
மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்
மேலும் பேசிய ஜாய் கிரிசில்டா, “சிலர் ரங்கராஜை என்னிடம் இருந்து பிரிக்க முயல்கிறார்கள். ஸ்டார் ஹோட்டலில் ஒரு முறையும், பிரபல தனியார் தொலைக்காட்சி ஷூட்டிங் ஸ்பாட் என இரண்டு இடங்களில் வைத்து என்னை தாக்கினார். குழந்தை வேண்டாம், நீ மட்டும் போதும் என அவர் கூறியுள்ளார். எனவே, எனக்கும் என் குழந்தைக்கும் பாதுகாப்பும், நீதியும் கிடைக்க வேண்டும்” என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.