தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் நடிகர் லிவிங்ஸ்டன். ஹீரோவாகவும், குணச்சித்திர ரோல் மற்றும் வில்லன் ரோல் என்று பல கேரக்டர்களில் அவர் நடித்துள்ளார். வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இப்போது அவரது மகள் ஜோவிதா லிவிங்ஸ்டனும் சீரியல்களில் கலக்கி வருகிறார்.
24
பூவே உனக்காக:
பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்த ஜோவிதா, அதன் பிறகு அருவி என்ற சீரியலில் நடித்தார். இந்த தொடர் முடிந்த நிலையில் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் மௌனம் பேசியதே என்ற சீரியலில் நடித்து வருகிறார். அதிலும் இவர் தான் லீடு ரோலில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகர் அசோக்குமார் நடிக்கிறார்.
இவர் முருகா, பிடிச்சிருக்கு, கோழி கூவுது, காதல் சொல்ல ஆசை, மாய புத்தகம், லாரா என்று பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் இந்த சீரியலிலிருந்து நடிகை ஜோவிதா விலகுவதாக அறிவித்துள்ளார். அதோடு, அதற்கான காரணம் குறித்தும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் சொன்ன காரணம் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
44
புதிய சீரியலில் இருந்து விலகிய ஜோவிதா
எனது நடிப்பு உள்பட பலவற்றை நான் மாற்றிக் கொள்ள விரும்பினேன். ஆனால், எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இந்த சீரியலிலிருந்து நான் விலகிவிட்டேன். இந்த சீரியலில் என்னுடைய ரோலின் பெயர் துளசி. இந்த ரோலானாது கலாச்சாரத்திற்கு எதிரானதாக என்னை மாற்றியது. சுயநலமான ஒரு கதாபாத்திரம். இத்தனை நாட்களாக இந்த சீரியலில் நடித்து வந்த நிலையில் அது எனக்கு கஷ்டமாக இருந்தது. இது போன்ற காரணங்களால் இந்த சீரியலிலிருந்து நான் விலகுகிறேன். இதுவரை எனக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.