
ஹேமா கமிட்டி அறிக்கை, நல்லவர்கள் என்கிற போர்வைக்குள் ஒளிந்திருந்த பல பிரபலங்களின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த அறிக்கை வெளியான பின்னர் நடிகைகள் அடுத்தடுத்து பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது ஒருபுறம் இருக்க... சில பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கு தெரிந்த ரகசியங்களை ஓப்பனாக பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.
மேலும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து தொடர்ந்து கோலிவுட் நடிகர் - நடிகைகளிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பி வருவதையும் பார்க்க முடிகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஹேமா கமிட்டி பற்றி கேள்வி எழுப்பியபோது... "ஹேமா கமிட்டி குறித்து தனக்கு தெரியாது என.. அவர் கூறியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது". அதேபோல் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் அர்ஜுனிடம் இது குறித்த கேள்வியை முன்வைத்த போது, அவர் தன்னை பற்றியும், தன்னுடைய படங்கள் பற்றியும் கேள்வி கேளுங்கள்... மற்ற விஷயங்கள் பற்றி தன்னிடம் கேட்க வேண்டாம் என கூறினார்.
நடிகர் ஜீவா, தேனியில் துணி கடை திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, ஹேமா கமிட்டி குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரிடம், அவர் சீறிக்கொண்டு சண்டைக்கு பாய்ந்தது மிகப்பெரிய சர்ச்சையாக வெளிடித்தது. பின்னர் தமிழ் சினிமாவில் இதுபோன்ற பாலியல் பிரச்சனைகள் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் பழக்கங்கள் இல்லை என தெரிவித்தார்.
நடிகர்கள் தங்களை நல்லவர்கள் போல் காட்டிக்கொண்டாலும்... நடிகை ஊர்வசி, ராதிகா, குஷ்பூ போன்ற சீனியர் நடிகைகள் தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது என கூறி அதிரவைத்தனர். தமிழ் சினிமா குறித்து... நடிகர்கள் இதுவரை முன்வந்து எந்த கருத்தையும் கூற தயக்கம் காட்டி வருவது ஒருபுறம் இருக்க... பத்திரிகையாளர் பரமேஸ்வரன் பேசும் போது... கேரளாவில் தற்போது வெளியிட்டுள்ள ஹேமா கமிஷன் அறிக்கை வற்புறுத்தி படுக்கைக்கு அழைக்கும் நடிகர்கள், அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் தயாரிப்பாளர்கள், போன்ற பல பிரபலங்கள் தலையில் பாறாங்கல்லை இறக்கியுள்ளது.
அவரு தைரியமான ஆளாச்சே; 'பரதேசி' படப்பிடிப்பில் பாலா செய்த மோசமான செயல்! கொந்தளித்த காஜல் பசுபதி!
தற்போது வரை...ஹேமா கமிட்டி அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றும், சில தகவல்கள் மட்டுமே லீக் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயமே பல முன்னணி நடிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மம்முட்டி - மோகன்லால் போன்ற நடிகர்கள், சமாளிப்பதற்காகவே இது போன்ற விசாரணையை ஆதரிப்பதாக கூறி வருகின்றனர். இதுவும் கிட்டத்தட்ட அவர்கள் எதிர்ப்பதற்கு சமம் தான் என தெரிவித்துள்ளார்.
அதே சமயம், பல விஷயங்களுக்கு நடிகைகளின் கூறும் உண்மை தான் சாட்சி. ஆதாரம் என்பது கிடையாது. நீதிமன்றத்தை பொறுத்தவரை தவறை நிரூபிக்க சாட்சி முக்கியம் எனவே இந்த ஹேமா கமிட்டி அறிக்கையால் யாரும் தண்டிக்கப்பட போவதில்லை என்றும், ஆனால் மிரட்டி படுமவைத்த ஸ்டார் நடிகர்களின் மனசுக்கு உண்மை என்ன என்பது தெரியும்.
முதல் முறையாக பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்டு.. திக்கு முக்காட வைத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
தொடர்ந்து பேசிய பரமேஸ்வரன், ஒரு காலத்தில் நடிகை ஷகிலாவின் கவர்ச்சி படங்கள்... மம்முட்டி மோகன் லாலின் படங்களையே வசூல் ரீதியாக மண்ணை கவ்வ வைத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஷகிலாவை பொறுத்தவரை, மோகன்லால் பற்றி அந்த சமயமத்திலேயே கடுமையாக விமர்சித்துள்ளார் என்றும் மற்ற சினிமா துறையை விட, மலையாள திரை உலகில் மிரட்டி படுக்க வைக்கும் கலாச்சாரம் உள்ளதாக அதிகமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால்... நடிக்க சீனே கொடுக்காமல் பெஞ்சில் அமர வைத்து விடுவார்கள். இதுபோல் ஒரு சம்பவம் மம்மூட்டியால், மஞ்சு வாரியருகே நடந்துள்ளது. அந்த செய்திகள் அதிக அளவில் திரையுலகிலும் பேசப்பட்டதாம்.
ரக்கட் லுக்கில்... BMW பைக்கில் அமர்ந்து மிரட்டலாக போஸ் கொடுக்கும் ரட்சிதா மகாலட்சுமி!
அதாவது சுமார் 20... 22 வருடங்களுக்கு முன்பு, நடிகை மஞ்சு வாரியர், மம்மூட்டியுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி, நடித்து கொண்டிருக்க... காலை ஷூட்டிங் முடிந்த பின்னர் மாலை, மஞ்சு வாரியரை தன்னுடைய ரூமுக்கு, மம்மூட்டி வர சொல்லியதாகவும், மஞ்சு வாரியர் அப்போதே மிகவும் தைரியமாக... அந்த கிழவன் கூட என்னால படுக்க முடியாது எனக்கூறி, இந்த செய்தியை சொல்ல வந்த அவரின் அஸிஸ்டன்டிடம் கூறி அனுப்பியதாக பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். மறுநாள் மஞ்சு வாரியர் ஷூட்டிங் வந்த போது அவருக்கு எந்த ஒரு சீனுமே கொடுக்காமல் பழிவாங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மஞ்சு வாரியார் மலையாள திரையுலகை தாண்டி தமிழிலும் நடித்து வருகிறார். அசுரன் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததை தொடர்ந்து, அஜித்துடன் துணிவு படத்திலும் நடித்திருந்தார். மேலும் மலையாள திரையுலகில் மோகன் லாலுடன் ஒப்பிடுகையில், மம்மூட்டி மிகவும் கண்ணியமானவர்... மனைவிக்கு பயந்து நடப்பவர் என சிலர் கூறி வந்த நிலையில் பத்திரிகையாளர் பரமேஸ்வரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“சினிமாவில் எப்பவுமே பாலியல் தொந்தரவு இருக்கும்; இப்ப பேசுறது எல்லாம்” பிரபல நடிகை ஷாக் தகவல்!
ரஜினிகாந்த் ஹேமா கமிட்டி குறித்து தனக்கு தெரியாது என பொறுப்பற்ற பதில் ஒன்றை கூறியுள்ளது பற்றியும் விமர்சித்து பேசியுள்ள இவர், "சினிமா, அரசியல், ஆன்மீகம் என அனைத்து விஷயங்களை பற்றியும் தெரிந்து வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த ஹேமா கமிட்டி குறித்து தனக்கு தெரியவே தெரியாது என்று கூறியுள்ளது அதிர்ச்சியாகவும்.. ஆச்சர்யமாகவும் உள்ளதாக பேசியுள்ளார். எனினும் இதன் பின்னர் மீண்டும் ரஜினிகாந்த் இந்த ஹேமா அறிக்கை குறித்து வாய்திறப்பாரா? அல்லது தொடர்ந்து மௌனம் சாதிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.