வட சென்னை படத்தில் வரும் ‘கார்குழல் கடவையே’ பாடலுக்கு பின்னணியில் இப்படி ஒரு வரலாறு ஒளிஞ்சிருக்கா!!
வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படத்தில் இடம்பெறும் கார்குழல் கடவையே பாடல் வரிகளின் பின்னணியில் உள்ள வரலாறு பற்றி பார்க்கலாம்.
வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படத்தில் இடம்பெறும் கார்குழல் கடவையே பாடல் வரிகளின் பின்னணியில் உள்ள வரலாறு பற்றி பார்க்கலாம்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் வட சென்னை. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். அவரின் பாடல்களும் பின்னணி இசையும் அப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த வகையில், அப்படத்தில் பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் உருவான கார்குழல் கடவையே என்கிற ரொமாண்டிக் பாடல் ஒரு மாஸ்டர் பீஸ் பாடல் என்றே சொல்லலாம்.
அப்பாடல் வரிகளில் ஒளிருந்திருக்கும் வரலாறு பற்றி பார்க்கலாம். கார்குழல் கடவையே பாடலில் இடம்பெறும், ‘கண்ணாடி கோப்பை ஆழியில் நான் கைமீறி சேர்ந்த தேயிலை’ என்கிற வரிகளுக்கு பின்னால் ஒரு வரலாறே ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. அது வேறெதுவுமில்லை, தேநீர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை இந்த பாடல் வரிகளில் அழகாக சொல்லி இருக்கிறார் பாடலாசிரியர் விவேக்.
டீ யாருக்கு தான் புடிக்காது. டீ எப்படி உருவானது என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. சீனாவில் கிமு 3ம் நூற்றாண்டில் ஷென்னாங் என்கிற பேரரசர் இருந்தார். ஒரு நாள் அந்த மன்னர் குடிப்பதற்காக தண்ணீரை கொதிக்கவைத்துக்கொண்டிருந்தார்களாம். அந்த நேரம் பார்த்து காத்தடித்ததில், அருகில் இருந்த ஒரு செடியில் இருந்து ஒரு இலை பறந்து வந்து அந்த தண்ணீருக்குள் விழுந்திருக்கிறது.
அந்த இலை அதில் விழுந்ததும் அந்த நீரினுடைய நிறம் மாறி இருக்கிறது. நிறம் மாறிய அந்த நீரை மன்னர் பருகியதும் அவருக்கு உடனே அது புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது. பறந்து வந்த அந்த இலை தான் தேயிலை. அப்போதில் இருந்து தான் டீ என்கிற தேநீர் பரவலாக பயன்படுத்தப்பட்டது. தண்ணீரில் தற்செயலாக விழுந்த அந்த இலை தான் தண்ணீரை தேநீராக மாற்றியது.
காதல் கூட இதே மாதிரி தற்செயலானது தான். யாரென்றே தெரியாத ஒரு புது ஆளை நாம் பார்க்கும் போது வருகிற அனுபவம் தான் காதல். இந்த அழகான விஷயத்தை தான் வட சென்னை படத்தில் வரும் கார்குழல் கடவையே பாடலில் சொல்லி இருப்பார் விவேக்.
இந்த பாடலில் கண்ணாடி கோப்பை ஆழியில் என்பதை ஐஸ்வர்யா ராஜேஷையும், கைமீறி விழுந்த தேயிலை என்று தனுஷையும் ஒப்பிட்டு தேநீரோட அந்த பரவசத்தை காதலை வெளிப்படுத்த பயன்படுத்தி இருக்கிறார் பாடலாசிரியர் விவேக். அதாவது கொதிநீரில் விழுந்த தேநீர் எப்படி ஒரு தற்செயலான விஷயமோ, அதேமாதிரி தான் இந்த காதலும் தற்செயலானது என்பதை ஒரே வரியில் மிகவும் அற்புதமாக சொல்லி இருந்தார் விவேக்.
இதையும் படியுங்கள்... ஆபாச படத்தில் நடித்து தவறு செய்துவிட்டேன்! விவாகரத்து குறித்து முதல் முறையாக மனம் திறந்த ஸ்வர்ணமால்யா!
அதே மாதிரி இந்த பாடலின் முதல் வரியே கார்குழல் கடவையே என தொடங்கும். அதில் கடவை என்றால் வாசம் என்று அர்த்தம். கார் கூந்தல் வாசத்தில் எனை எங்கே இழுக்கிறாய் என்பது தான் அதன் முழு அர்த்தம்.
வட சென்னை படத்திற்காக விவேக் எழுதிய இந்த பாடலை ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடி இருந்தார். மிகவும் அழகான இந்த பாடலை படத்தில் முழுதாக பயன்படுத்தி இருக்கமாட்டார் இயக்குனர் வெற்றிமாறன். இருந்தாலும் தமிழ் திரை இசை பாடல்களில் இது ஒரு underrated பாடலாகவே பார்க்கப்படுகிறது.
வடசென்னை திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். மேலும் சமுத்திரக்கனி, அமீர், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
பொல்லாதவன், ஆடுகளம் என வரிசையாக இரண்டு மாஸ் ஹிட் படங்களை கொடுத்த பின்னர் தனுஷும் வெற்றிமாறனும் இணைந்த படம் இதுவாகும். இப்படத்தின் முதல் பாகம் அதிரிபுதிரியான வெற்றியை ருசித்ததால் அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவித்தனர்.
ஆனால் வெற்றிமாறன் தற்போது விடுதலை அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் என வரிசையாக படங்களை கைவசம் வைத்திருப்பதால் வடசென்னை படத்தை கையிலெடுக்காமல் வைத்திருக்கிறார். ஆனால் நிச்சயம் உருவாகும் என்று பல்வேறு பேட்டிகளில் கூறி வருகிறார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனே ஒரு பேட்டியில் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக சில காட்சிகளை வெற்றிமாறன் ஏற்கனவே படமாக்கிவிட்டதாக கூறி இருப்பார். மேலும் அதை தான் பார்த்துவிட்டதாகவும் வேறலெவலில் இருக்கிறது என்றும் சிலாகித்து பேசி இருப்பார்.
கார்குழல் கடவையே பாடல் மட்டுமின்றி வடசென்னை படத்தில் இடம்பெற்ற என்னடி மாயாவி நீ பாடலும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடி இருந்தார். அமீர் மற்றும் ஆண்ட்ரியா இடையேயான காதல் டூ கல்யாணத்தை இந்த ஒரே பாடலில் அழகாக காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர் வெற்றிமாறன்.
வடசென்னை படம் ரிலீசாகி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆனாலும் அப்படத்திற்கு விருது உள்ளிட்ட எந்த அங்கீகாரமும் கிடைக்காதது படக்குழுவுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. அதனால் இரண்டாம் பாகத்தை வேறலெவலில் எடுத்து விருதுகளை வென்று குவிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
வட சென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதில்லை அவருக்கு பதிலாக அவரது உதவி இயக்குனர் அந்தக் கதையை இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதெல்லாம் வெறும் வதந்தி என சொல்லி அதற்கு இயக்குனர் வெற்றிமாறனே முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை; மிரட்டப்படும் நடிகைகள்! அறிக்கை வந்தால் 500 பேர் சிக்குவாங்க - ரேகா நாயர்