என்னை ஏமாற்றி படங்களில் நடிக்க வைத்தனர்; முதன் முறையாக மனம் திறந்த ஸ்வர்ணமால்யா!

'இளமை புதுமை' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான ஸ்வர்ணமால்யா தன்னுடைய விவாகரத்து குறித்தும், சினிமா கேரியரில் செய்த மிகப்பெரிய தவறு குறித்தும் முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.
 

Sun TV Swarnamalya

சென்னை சேர்ந்த ஸ்வர்ணமால்யா, சிறுவயதில் இருந்தே பரதநாட்டிய கலையில் கவனம் செலுத்தி வந்த நிலையில்... இதுவே அவருக்கு சின்னத்திரை மற்றும் சினிமா பட வாய்ப்புகள் கிடைக்க காரணமாக அமைந்தது. குறிப்பாக சன் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய 'இளமை புதுமை' என்கிற நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்தது. 

Swarnamalya Acting Maniratnam Movie

அந்த கால கட்டத்தில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல இளசுகள் போட்டி போடும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி இருந்தது. இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், மாதவன் மற்றும் ஷாலினி நடித்த 'அலைபாயுதே' திரைப்படத்தில் ஷாலினியின் அக்காவாக... மிகவும் சைலன்டான கதாபாத்திரத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து ரசிகர்கள் மனதை  கவர்ந்தார் ஸ்வர்ணமால்யா.

அவரு தைரியமான ஆளாச்சே; 'பரதேசி' படப்பிடிப்பில் பாலா செய்த மோசமான செயல்! கொந்தளித்த காஜல் பசுபதி!


Swarnamalya Divorce

அலைபாயுதே திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த சமயத்தில் தான், தன்னுடைய பெற்றோர் பார்த்த வெளிநாட்டு மாப்பிள்ளையான அர்ஜூன் ராஜா ராமன் என்பவரை ஸ்வர்ணமால்யா... கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். ஆனால் துரதிஷ்டவசமாக இரண்டே வருடத்தில் இவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

Swarnamalya Re-Entry in Cinema

விவாகரத்தை தொடர்ந்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கிய ஸ்வர்ண மால்யா விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  பின்னர் கியா கியா, யுகா, மொழி, அழகும் நிலையும், வெள்ளித்திரை, கேரளா போலீஸ், இங்கே என்ன சொல்லுது, புலிவால், என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

கர்ப்பமாக இருக்கும் வயிற்றை காட்டியபடி.. தீபிகா படுகோன் வெளியிட்ட பிரக்னன்சி போட்டோ ஷூட்!

Swarnamalya Marriage Life Struggles

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் சமீப காலமாக கவனம் செலுத்தி வந்த ஸ்வர்ணமால்யா, சமீபத்தில் தனியார் youtube சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய விவாகரத்து மற்றும் ஏமாற்றி ஆபாசப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டது குறித்தும் பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஸ்வர்ணமால்யா, "திருமணமாகி நான் வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என எனது பெற்றோர் தான் ஆசைப்பட்டனர். பெற்றோருக்கு பிடித்தது போல் மாப்பிள்ளை அமைந்ததால், இளம் வயதிலேயே என்னுடைய திருமணம் நடந்து முடிந்தது. எனக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை என்றாலும், பெற்றோரிடம் சில விஷயங்களை பேச வேண்டும் என நான் நினைத்த போதும்... ஏதும் பேசாமல், திருமணம் ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என என் மனதை தேற்றிக்கொண்டு திருமண வாழ்க்கையில் நுழைந்தேன்.

Swarnamalya About Cinema carrier

ஆனால் திருமணத்திற்கு பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகள்...  விவாகரத்து வரை வந்தது.  பலர் நான் சினிமாவில் இருந்தது தான் விவாகரத்துக்கு காரணம் என பேசினார்கள். ஆனால் உண்மை அதில் உண்மை இல்லை. என்னுடைய தாத்தாவும் சினிமாவில் இருந்தவர் தான். எனக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்த போது சரியான வழிகாட்டி இல்லாததால் சினிமாவில் நிலையான இடத்தை என்னால் பிடிக்க முடியாமல் போனது.

முதல் முறையாக பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்டு.. திக்கு முக்காட வைத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

Choosing Wrong Movies

 இயக்குனர் மணிரத்தினம் படத்தில் பணியாற்றிய பின்னர்... அவரைப் போலவே அனைவரும் இருப்பார்கள் என தவறாக நினைத்து விட்டேன். என்னுடைய அறியாமையை பயன்படுத்தி...  ஒரு ஆபாச படத்தில் என்னை கெஸ்ட் ரோலில்  சிலர் ஏமாற்றி நடிக்க வைத்துவிட்டார்கள். அந்த படம் ஒரு டப்பிங் படம் தான். ஒரிஜினல் படத்தின் சிடியையும் என்னிடம் கொடுத்தார்கள். அந்த காட்சிகள் நடிப்பதற்கு நான் ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டிருக்கிறேன். அப்படி என்றால் நான் எவ்வளவு விளையாட்டுத்தனமாக இதை செய்திருப்பேன் என நினைத்து பாருங்கள்.

Swarnamalya Emotional Speech

நான் ஏமாற்றப்பட்டதால்... நீதிமன்றம் வரை சென்று கூட இது குறித்து என்னால் பேசி இருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. இதை பேச போய் இன்னும் பல பிரச்சினைகள் வருமா? என தோன்றியதுதான் அதற்கு காரணம் என்றும் தன்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு தன்னுடைய திருமணம் என கூறியுள்ளார் ஸ்வர்ணமால்யா.

100 கோடி ரூபா மதிப்புள்ள வீட்டை விற்றது ஏன்? நடிகை சாந்தி வில்லியம்ஸ் சொன்ன ஷாக்கிங் தகவல்

Latest Videos

click me!