மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் பற்றி பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நடிகை ராதிகா, அண்மையில் அளித்த பேட்டியில், கேரளாவில் ஷூட்டிங் சென்றபோது அங்கு கேரவனில் கேமரா இருந்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில், நடிகரும், சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ஸ்வேதா மேனன் பற்றி ஷாக்கிங் சம்பவம் ஒன்றை கூறி இருக்கிறார்.
24
Shwetha Menon
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளவர் ஸ்வேதா மேனன். சோசியல் மீடியாவில் கவர்ச்சி படங்களை அள்ளி வீசி லைக்குகளை அள்ளிவரும் நடிகை ஸ்வேதா மேனன், ரதிநிர்வேதம் பட கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டபோது தான் எதிர்கொண்ட வலி, வேதனை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்த தகவலை தான் பயில்வான் ரங்கநாதன் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
ரதிநிர்வேதம் பட கிளைமாக்ஸில் ஹீரோ, நடிகை ஸ்வேதா மேனன் பின்புறம் அடிக்கும்படியான காட்சி படமாக்கப்பட்டதாம். அப்போது அந்த காட்சியில் சரியாக அடிக்காததால் 25 முறை டேக் வாங்கினாராம். இதனால் அவர் அடித்து அடித்து அந்த இடமே தனக்கு சிவந்துவிட்டதாகவும், பின்னர் மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறிய பயில்வான், நடிகையின் இந்த பேட்டி, பின்புறம் சிவக்க சிவக்க அடித்த நாயகன் என்கிற பெயரில் வெளியாகி லைக்குகளை பெற்றதாக தெரிவித்துள்ளார்.
44
Rathinirvedam Movie Incident
நடிகை ஸ்வேதா மேனன் தமிழில் சிநேகிதியே படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து சாதுமிராண்டால், நான் அவன் இல்லை 2ம் பாகம் போன்ற படங்களில் நடித்தார். அந்த படங்கள் பெரியளவில் சோபிக்காததால், கோலிவுட்டுக்கு டாட்டா காட்டிவிட்டு சென்ற அவர், அதன் பின்னர் கோலிவுட் பக்கம் தலைகாட்டவே இல்லை. பின்னர் இந்தியில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஸ்வேதா மேனன், ரதிநிர்வேதம் என்கிற மலையாள படம் மூலம் தான் இளசுகள் மத்தியில் பேமஸ் ஆனார். ஏனெனில் அது ஒரு அடல்ட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.