ரஜினியுடன் மோத பயந்து அடுத்தடுத்து தீபாவளி ரேஸில் குதிக்கும் தமிழ் படங்கள் - முழு லிஸ்ட் இதோ

First Published | Sep 3, 2024, 7:45 AM IST

தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதையொட்டி ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்களை பற்றி பார்க்கலாம்.

Amaran to Bloody Beggar here the list of Tamil Movies released for Diwali 2024 gan
Diwali Release Movies

தீபாவளி என்றாலே பட்டாசு மற்றும் புத்தாடை முக்கிய பங்காற்றுவதை போல் புதுப் படங்களும் அன்றைய தினம் போட்டிபோட்டு ரிலீஸ் ஆவது உண்டு. தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. ஏனெனில் அன்றைய நாளில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆவதுண்டு. ஆனால் இந்த ஆண்டு ரஜினி, அஜித், விஜய், கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. ரஜினியின் வேட்டையன் படம் போட்டியின்றி ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் ஆக உள்ளதால், அதனுடன் மோத பயந்து தீபாவளி ரேஸில் களமிறங்கும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

Amaran to Bloody Beggar here the list of Tamil Movies released for Diwali 2024 gan
Amaran

அமரன்

தீபாவளி ரேஸில் முதன்முதலில் களமிறங்கிய திரைப்படம் என்றால் அது அமரன் தான். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. வருகிற அக்டோபர் 31ந் தேதி அமரன் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... அந்த காட்சியில் நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது! 'வாழை' படத்தை பார்த்த பின் ரஜினி வெளியிட்ட அறிக்கை!


Brother

பிரதர்

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தீபாவளி ரேஸில் குதித்த மற்றொரு படம் பிரதர். இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், சீதா, பூமிகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைத்து உள்ளார். இப்படமும் அக்டோபர் 31-ல் திரைக்கு வருகிறது.

Bloody Beggar

பிளெடி பெக்கர்

தீபாவளி ரேஸில் லேட்டஸ்டாக இணைந்துள்ள திரைப்படம் பிளெடி பெக்கர். இப்படத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். டாடா, ஸ்டார் படங்களின் வெற்றிக்கு பின்னர் கவின் ஹீரோவாக நடித்துள்ள படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இப்படத்தை தயாரித்துள்ளது இயக்குனர் நெல்சன் தான். அவர் தயாரித்துள்ள முதல் படம் இதுவாகும். இப்படமும் அக்டோபர் 31-ல் களம் காண உள்ளது.

இதையும் படியுங்கள்... "வெயிட்டு பார்ட்டி தான்" பாடகி ஸ்ரேயா கோஷலின் கணவர் 1400 கோடிக்கு அதிபதியாம் - யாருப்பா அவரு?

Latest Videos

click me!