இவங்க கிளாமரான மஞ்சக்காட்டு மைனா போல.. கவர்ச்சி பூவாக மாறிய ரைசா வில்சன்!

Raiza Wilson : பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே, நடிகை ரைசா வில்சன் தனுஷின் "வேலையில்லா பட்டதாரி" படத்தின் 2ம் பாகம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

Actress Raiza Wilson

பெங்களூரில் தனது பட்டப் படிப்பை முடித்திருந்தாலும், ஊட்டியில் பிறந்து வளர்ந்து தனது பள்ளி படிப்பை இங்கேயே முடித்த நடிகை தான் ரைசா வில்சன். பெங்களூரு சென்று தனது பட்டப் படிப்பை முடித்தவுடன், அங்குள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் மேனேஜராக சில ஆண்டுகாலம் இவர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

அவரு தைரியமான ஆளாச்சே; 'பரதேசி' படப்பிடிப்பில் பாலா செய்த மோசமான செயல்! கொந்தளித்த காஜல் பசுபதி!

Raiza

அதன்பிறகு மாடலின் மீது ஆசை கொண்ட ரைசா வில்சன், கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற "மிஸ் இந்தியா சவுத்" அழகி போட்டிகளில் பங்கேற்றார், அதில் சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் கடந்த 2017ம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான "வேலையில்லா பட்டதாரி" படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.


Raiza Wilson

அந்த திரைப்படத்தில் நடித்து முடித்த வெகு சில நாட்களில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ரைசா வில்சன் பங்கேற்றார். தமிழ் மொழியை பொறுத்தவரை கடந்த 2017ம் ஆண்டு தான் முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. அந்த முதல் சீசனிலேயே போட்டியாளராக பங்கேற்று, 63வது நாளில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரைசா வில்சன் வெளியேறினார். பிக் பாஸ் மூலம் கிடைத்த புகழால் தொடர்ச்சியாக அவருக்கு பல திரைப்படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Actress Raiza Wilson Photos

இறுதியாக தமிழில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான "கருங்காப்பியம்" என்கின்ற திரைப்படத்தில், மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரைசா வில்சன், இப்போது தெலுங்கு மொழியில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். அவருடைய நடிப்பில் "The Chase" என்கின்ற தெலுங்கு திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

அந்த காட்சியில் நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது! 'வாழை' படத்தை பார்த்த பின் ரஜினி வெளியிட்ட அறிக்கை!

Latest Videos

click me!