நடிகையும், தொகுப்பாளருமான காஜல் பசுபதி, பெரிய இயக்குனர் தனக்கு கொடுத்த சிக்னல் பற்றியும், இயக்குனர் பாலா 'பரதேசி' படப்பிடிப்பில் நடந்து கொண்ட விதம் குறித்தும், பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எல்லா துறையிலுமே பாலியல் சீண்டல்கள் இருந்தாலும், சினிமாவை பொறுத்தவரை சற்று கூடுதலாகவே இந்த பிரச்சனை இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சமீப காலமாக சீரியல் நடிகைகள் முதல்.. இளம் நடிகைகள் வரை, பலர் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேட்டிகளில் கூறி வருகின்றனர்.
25
Sexual Harassment
கேரள நடிகைகளுக்கு ஏற்படும், பாலியல் தொல்லை குறித்து பதிவு செய்யப்பட்ட ஹேமா அறிக்கை கடந்த வாரம் வெளியான நிலையில் அடுத்தடுத்து பல நடிகைகள் ஏராளமான பாலியல் புகார்களை முன்வைத்து வருகின்றனர். இந்த புகார்களை ஏன் முன்பே கூறவில்லை என ஒரு பேச்சு அடிபட்டு வந்தாலும், ஹேமா அறிக்கை நடிகைகள் அவர்களுடைய வாழ்க்கையில் சந்தித்த சில மோசமான சம்பவங்களை வெளியே சொல்வதற்கான தைரியத்தை கொடுத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
கேரள நடிகைகள் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் நடிகைகள் இதுபோன்ற பிரச்சனைகளை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே குஷ்பூ, ராதிகா, போன்ற சீனியர் நடிகைகள் தமிழ் சினிமாவில் பாலியல் பிரச்சனை இருப்பதை வெளிப்படையாக கூறியுள்ள நிலையில் , தற்போது சின்னத்திரை சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையும்.. தொகுப்பாளருமான காஜல் பசுபதி... பெரிய இயக்குனர் ஒருவர், தன்னுடைய விரலை சுரண்டி அட்ஜஸ்ட்மென்ட்க்கு சிக்னல் கொடுத்தது பற்றியும், இயக்குனர் பாலா 'பரதேசி' படப்பிடிப்பில் துணை நடிகை இடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் விமர்சித்து பேசி உள்ளார்.
45
Kajal Pasupathi Movie And Serial
காஜல் பசுபதியை பொருத்தவரை, எதையும் நேராக வெளிப்படையாக கூறக்கூடிய நபர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் மிகவும் ஸ்டிரைட் ஃபார்வேட் நபர் என்பதாலேயே இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் பறிபோனதாம். ஒருமுறை சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, அந்த பெரிய இயக்குனர் தன்னிடம் கைகுலுக்கி விட்டு, விரலை சுரண்டி அட்ஜஸ்மென்ட்க்கு ஓகேவா என்று சிக்னல் கொடுத்ததாகவும்,தனக்கு அது புரிந்தாலும் எதுவும் தெரியாதது போல் காட்டிக்கொண்டு அந்த பத்து நாள் ஷூட்டிங்கை நடித்து கொடுத்ததாக கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து இயக்குனர் பாலா குறித்து பேசியுள்ள காஜல் பசுபதி, "இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் நானும் நடித்திருந்தேன். அப்போது தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் வேதிகாவை அடிப்பது போல் ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியில் வேதிகாவுக்கு பதிலாக ஒரு துணை நடிகையை அழைத்து பாலா கடுமையாக அடித்து காண்பித்தார். இதை பார்த்ததும் என் கண்கள் கலங்கிவிட்டது. அவர்தான் ரொம்ப தைரியமான ஆளாச்சே, ஹீரோயினையே அடிக்க வேண்டியது தானே? ஏன் அவரால் ஹீரோயினை அடிக்க முடியவில்லை. ஒரு துணை நடிகைக்கு நேர்ந்த அதே சம்பவம் தனக்கும் நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஆதங்கத்தோடு பேசி உள்ளார்.