"வெயிட்டு பார்ட்டி தான்" பாடகி ஸ்ரேயா கோஷலின் கணவர் 1400 கோடிக்கு அதிபதியாம் - யாருப்பா அவரு?

Ansgar R |  
Published : Sep 02, 2024, 08:17 PM IST

Shreya Ghosal Husband : இந்திய திரையுலகை பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்கும் பாடகியாக ஸ்ரேயா கோஷல் திகழ்ந்து வருகின்றார்.

PREV
14
"வெயிட்டு பார்ட்டி தான்" பாடகி ஸ்ரேயா கோஷலின் கணவர் 1400 கோடிக்கு அதிபதியாம் - யாருப்பா அவரு?
Singer Shreya Ghoshal

தமிழ், ஹிந்தி என்று இந்திய மொழிகள் பலவற்றில் சிறந்த பாடல்களை பாடி புகழ்பெற்றவர் ஸ்ரேயா கோஷல். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 240 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது கணவர் ஷிலாதித்யா முகோபாத்யாயாவைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது. ஆனால் ஸ்ரேயாவை விட 5 மடங்கு மிகப்பெரிய பணக்காரர் அவரது கணவர் என்பது தான் ஹைலைட்.

ஆட்டிசம் பாதித்த மகனுக்காக ரிஸ்க் எடுத்த தந்தை: இர்பானின் செயலால் கதறி அழுத மொத்த குடும்பம்

24
Shiladitya

ஸ்ரேயாவும் அவரது கணவர் ஷிலாதித்யாவும் பால்ய நண்பர்கள். அதுமட்டுமல்ல, நம்மால் பலர் தினமும் பயன்படுத்தும் Truecaller செயலியின் உலகளாவிய தலைவராக உள்ளார் ஷிலாதித்யா என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 2022ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தில் அவர் பணியாற்றி வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட TrueCaller செயலி, சுமார் 374 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களைக் கொண்டுள்ளது.

34
Shiladitya Software engineer

ஷிலாதித்யா மும்பை பல்கலைக்கழகத்தில் BE எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டம் பெற்றவர். வணிக மேம்பாடு, மொபைல் பயன்பாடுகள், மென்பொருள் திட்ட மேலாண்மை, தயாரிப்பு மேலாண்மை, ஆட்டோமேஷன் அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் திறமையானவர் இவர். ஷிலாதித்யாவின் லிங்க்ட்இன் பக்கத்தின்படி, Truecaller நிறுவனத்தில் குளோபல் தலைவராக ஆகும் முன்பு, CleverTap என்ற செயலியில் விற்பனை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

44
Shreya Husband

ஷிலாதித்யா தற்போது ரூ.1406 கோடி மதிப்பிலான நிறுவனத்திற்கு இணைத் தலைவராக உள்ளார். அவர் அண்மையில் இரண்டு புதிய ஸ்டார்ட்அப்களையும் தொடங்கியுள்ளார்: ஹிப்காஸ்க், எனப்படும் இந்தியவில் உள்ள சிறந்த ஒயின்களில் கண்டறிய, நுகர்வோருக்கு உதவும் செயலி அவர் தொடங்கியது தான். சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை இலக்காகக் கொண்ட மொபைல் லாயல்டி பேமெண்ட் நெட்வொர்க்கான PointShelf ஐயும் ஷிலாதித்யா நிறுவினார்.

கர்ப்பமாக இருக்கும் வயிற்றை காட்டியபடி.. தீபிகா படுகோன் வெளியிட்ட பிரக்னன்சி போட்டோ ஷூட்!

Read more Photos on
click me!

Recommended Stories