நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை தீபிகா படுகோன் தன்னுடைய வயிற்றை காட்டியபடி, வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ளார். இவருடைய கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
211
Bollywood Actress Deepika Padukone
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், 2006-ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான 'ஐஸ்வர்யா' என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
311
Deepika Padukone Debut
இதை தொடர்ந்து இவரை பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க வைக்க தேர்வு செய்தவர் ஷாருக்கான் தான். 2007-ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற 'ஓம் ஷாந்தி ஓம்' படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகி, தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.
411
Deepika Padukone And Shahrukhkhan Movies
ஹிந்தியில் தனக்கு ஷாருக்கான் வாய்ப்பு கொடுத்தார் என்கிற ஒரே காரணத்திற்காகவே, தீபிகா படுகோனே ஷாருக்கான் என்ன சொன்னாலும் அதனை வேத வாக்காக எடுத்து கொள்பவர்.
511
Deepika Padukone Sentiment
ஷாருக்கானின் குடும்பத்துக்கே மிகவும் நெருக்கமானவராகவும் மாறி விட்டார் தீபிகா. எவ்வளவு பிசியாக இருந்தாலும், ஷாருக்கான் தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என தீபிகாவிடம் கேட்டு கொண்டால் மறு பேச்சு பேசாமல் நடிப்பவர்.
611
Deepika Padukone Love Ranveer singh
முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்த தீபிகா படுகோன், கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் இத்தாலியில் மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
711
Deepika Padukone Wedding
இது ஒரு பிரைவேட் நிகழ்ச்சியாக நடந்த நிலையில், இதில் ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்ட குறிப்பிட்ட திரையுலக பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டு தீபிகா - ரன்வீர் சிங் ஜோடியை வாழ்த்தினர்.
811
Deepika Padukone Announced Pregnancy
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த தீபிகா படுகோன், கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் இனிமையான செய்தியை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
911
Deepika Padukone Kalki Movie
இவர் கர்ப்பமாக மாறிய பின்னர், வெளியான கல்கி 2898 ஏடி படத்தில் புரோமோஷன் பணிகளிலும் கலந்து கொண்டார். அப்போது அமிதாப் பச்சன் மற்றும் பிரபாஸ் இருவரும் தீபிகா படுகோனுக்கு போட்டி போட்டு கொண்டு உதவியது வைரலாக பேசப்பட்டது.
1011
Deepika Padukone Photos
கற்பமானதற்க்கு பின்னர் முழு ஓய்வில் இருக்கும் தீபிகா படுகோன் தற்போது கர்ப்பமாக இருக்கும் வயிறு தெரியும்படி... வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
1111
Fans Wishes
இதில் தன்னுடைய கணவர் ரன்வீர் சிங்குடன் ரொமான்ஸ் செய்தபடியும் தீபிகா படுகோன் போஸ் கொடுத்துள்ளார். கூடிய விரைவில் அழகிய குழந்தையை பெற்றெடுக்க உள்ள இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.