லோக்கி மாஸ் காட்டிவிட்டாப்ல.. கூலி படம்.. "தலைவரின்" பெயர் என்ன தெரியுமா?

Ansgar R |  
Published : Sep 02, 2024, 06:23 PM IST

Coolie Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்பட பணிகளை விறுவிறுப்பாக கவனித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

PREV
14
லோக்கி மாஸ் காட்டிவிட்டாப்ல.. கூலி படம்.. "தலைவரின்" பெயர் என்ன தெரியுமா?
Actor Soubin Shahir

இந்நிலையில் கடந்த சில நாள்களாக அந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகர் சௌபின் ஷாஹிர், முதல் முறையாக கோலிவுட் உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "கூலி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. "தயால்" என்கின்ற கதாபாத்திரத்தில் அவர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

என் வாழ்க்கையிலே முதல் தடவை இதை பண்ணுனேன்! விஜய் சொன்ன வார்த்தை.. நெகிழ்ச்சியில் வெங்கட் பிரபு!

24
Super Star Nagarjuna

அதேபோல ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தாலும், முதல் முறையாக தமிழ் திரை உலகில் ரஜினிகாந்தோடு இணைந்திருக்கிறார் பிரபல தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா. "சைமன்" என்கின்ற கதாபாத்திரத்தில் இப்படத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

34
Actor Sathyaraj

மேலும் சுமார் 38 ஆண்டுகள் கழித்து, அதாவது மிஸ்டர் பாரத் படத்திற்கு பிறகு இந்த "கூலி" திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார் பிரபல நடிகர் சத்யராஜ். அதேபோல முதல் முறையாக பிரபல கன்னட திரை உலக நடிகர் உபேந்திரா ரஜினிகாந்துடன் இந்த "கூலி" படத்தில் நடிக்க உள்ளார். உபேந்திரா மிகப்பெரிய ரஜினிகாந்த் ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

44
Rajinikanth

இப்படி கடந்த சில நாள்களாக கூலி படத்தில் நடிக்கும் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் பற்றிய தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று இந்த கூலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகி உள்ளது. தற்பொழுது வெளியான தகவலின்படி கூலி திரைப்படத்தில் "தேவா" என்கின்ற கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். அவர் நடித்த "தளபதி" திரைப்படத்தில் மம்மூட்டியின் பெயர் தேவா என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்டு.. திக்கு முக்காட வைத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

Read more Photos on
click me!

Recommended Stories