நடிகை ஐஸ்வர்யா ராய், சல்மான் கானை காதலித்து... பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து ஐஸ்வயா ராய்க்கு ரகசிய திருமணம் நடந்ததாக ஒரு தகவல் பரவியதை தொடர்ந்து இதற்க்கு ஐஸ்வர்யா ராய் அளித்த பதில் குறித்து பார்க்கலாம்.
சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் 1990 களின் பாலிவுட்டின் கியூட் காதல் ஜோடியாக வலம் வந்தனர். ஹம் தில் தே சுகே சனம் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தபோது, இவர்களின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி, பாலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரியல் வாழ்க்கையிலும் இருவரும் ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டனர்.
26
Aishwarya Rai Movies
ரசிகர்களின் ஆசை படி, நிஜமாகவே ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான் கான் இருவரும் காதலிக்க துவங்கினர். காதலிக்கும் போது இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் இருவருக்குமே வெற்றி படங்களாக அமைந்தது. சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் மீது அதிக பொஸசிவ்வுடன் இருந்ததே இவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட காரணமாக அமைந்தது. ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட் வரை சென்று ஐஸ்வர்யா ராயை தாக்கி சல்மான் கான் சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இவர்களின் பிரேக்அப் செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்த போது, ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான் கான் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு, தேனிலவு பயணமாக நியூயார்க்கிற்கு சென்றதாக சில தகவல்கள் உலா வந்தன. இந்த வதந்திக்கு மிகவும் போல்டாக பதிலளித்த ஐஸ்வர்யா ராய், இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்திருந்தால் அது முழு திரையுலகிற்கும் தெரிந்திருக்கும் என்று கூறினார்.
46
Aishwarya Rai Clarify Rumor
தொடர்ந்து பேசிய அவர், "என் அம்மாவின் விபத்துக்குப் பிறகு என் குடும்பத்துடன் நேரம் செலவிடக்கூட எனக்கு நேரம் இல்லை. திருமணம் போன்ற பெரிய விஷயத்தை மறுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என தெரிவித்தார்."
இந்த சர்ச்சை அத்துடன் நிற்கவில்லை. ஐஸ்வர்யா ராய் ஒரே நேரத்தில் சல்மான் கான் மற்றும் விவேக் ஓபராயுடன் டேட்டிங் செய்வதாகவும் வதந்திகள் பரவின. சல்மான் கானின் சகோதரர் சோஹைல் கான், முன்னதாக ஒரு நேர்காணலில், ஐஸ்வர்யா பல முறை சந்தித்தும், குடும்பத்துடன் நல்ல நட்புடன் இருந்தபோதிலும், சல்மானுடனான தனது உறவை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறினார்.
66
Aishwarya Rai Rumors
தன்னுடைய வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பு பல பிரச்சனைகள் இருந்தபோதும், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிகர் அபிஷேக் பச்சனை மணந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராய்யை காதலித்த சல்மான் கான் பல காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதிலும், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். அதே போல்... நடிகர் விவேக் ஓபராய் 2010 இல் பிரியங்கா அல்வா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.