Rajinikanth
தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்தியா திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தென்னிந்தியாவில் மட்டுமல்ல.. இந்தியாவிலேயே முதல் 100 கோடி வசூல் அள்ளிய ஹீரோ ரஜினிகாந்த் தான். அவருக்கு தமிழில் மட்டுமல்லாமல்.. அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் கூட்டணியில் பல வெற்றிப் படங்கள் வெளிவந்துள்ளன. எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் மட்டும் ரஜினி மொத்தம் 25 படங்களில் நடித்துள்ளார்.
Superstar Rajinikanth
அந்த காலத்தில், ஒரு வருடத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று படங்களாவது முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்தார். 1990 களில் எஸ்.பி.முத்துராமனின் ஆதிக்கம் இருந்தது. அவர் தொடர்ச்சியாக படங்களை இயக்கினார். அதனால் அவருக்கென ஒரு தனிப்பட்ட டீம் இருந்தது. அவர்கள் வேறு எந்த படங்களிலும் வேலை செய்ய மாட்டார்கள். அவரது குழுவில் ஒளிப்பதிவாளர் விநாயகம், எடிட்டர் விட்டல் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் முஸ்தஃபா உட்பட 14 முக்கிய உறுப்பினர்கள் இருந்தனர். .
Rajinikanth Salary
ஆனால் அவர்கள் மற்ற படங்களில் வேலை செய்யாததால்.. அவரது குழுவில் இருந்த 14 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் குறைந்த அளவிலான சம்பளம் வழங்கப்படுவது தொடர்கதை ஆகி வந்ததாம். இந்த விஷயத்தால் எஸ்.பி. முத்துராமன் கடும் அப்செட் ஆனாராம். பின்னர் இந்த பிரச்சனை குறித்து ரஜினிகாந்தை அணுகி, தனக்காக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என அணுகிருக்கிறார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க ரஜினி நடித்த படம்தான் பாண்டியன்.
இதையும் படியுங்கள்... புஷ்பா 2 ஓடிடி உரிமையை தட்டிதூக்கிய நெட்பிளிக்ஸ் - அதுவும் இத்தனை கோடிக்கா?
Rajinikanth Not get salary for Pandian Movie
மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரான படம் பாண்டியன். இந்த படத்தின் தலைப்பிலும் ரஜினியின் நட்பு இருக்கும். அது மட்டுமல்ல... இந்த படத்திற்காக ரஜினிகாந்த் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை எஸ்.பி. முத்துராமன் தானே தயாரித்தார். படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதால், இந்த படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சியும் எந்தப் பொருளும் உடையாமல் படமாக்கப்பட்டது.
Rajini
கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும்.. இந்த படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சியில் ரஜினியைத் தாக்கும் நபர் கண்ணாடியை உடைக்க முயல, ரஜினி அவரைத் தடுத்து நிறுத்தி, நான் வேலை கேட்க வந்திருக்கிறேன். நீ இப்படி கண்ணாடியை எல்லாம் உடைத்தால் எனக்கு வேலை கிடைக்காது. அதனால் அடிப்பேன் ஆனால் நீ உடையாமல் விழ வேண்டும் என்று ரஜினி சொல்லும் வசனமும் ஹைலைட்டாக இருக்கும்.
Interesting facts about Rajini
இவ்வளவு கவனமாக எடுத்த படம் ஹிட் ஆனதால்.. பாண்டியன் படத்தின் மூலம் கிடைத்த லாபத்தை இயக்குனரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.முத்துராமன் உட்பட அவர் டீமில் உள்ள 14 பேரும் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் பாண்டியன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய வி.ஏ துரைக்கும் படத்தின் லாபத்தில் பங்கு கொடுத்தனர். இதன் மூலம் தான் வீடு வாங்கியதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... நைட் ஷோ மட்டும்தான்; நடுக்கடலில் அமைந்துள்ள விநோதமான சினிமா தியேட்டர் பற்றி தெரியுமா?