ரக்கட் லுக்கில்... BMW பைக்கில் அமர்ந்து மிரட்டலாக போஸ் கொடுக்கும் ரட்சிதா மகாலட்சுமி!

Published : Sep 02, 2024, 02:14 PM IST

பிரபல சீரியல் நடிகை ரட்சிதா மகாலட்சுமி, BMW பைக்கில் மிகவும் பந்தாவாக வலம் வரும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.  

PREV
15
ரக்கட் லுக்கில்...  BMW பைக்கில் அமர்ந்து மிரட்டலாக போஸ் கொடுக்கும் ரட்சிதா மகாலட்சுமி!
Rachitha Mahalakshmi

கன்னட சீரியலில் நடித்து பிரபலமாகி, பின்னர் தமிழ் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் ரட்சிதா மகாலட்சுமி. கடந்த 2011 முதல் 2012 வரை...  விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற சீரியலில் ஜோதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த, ரட்சிதா... நிஜத்தில் நல்ல வெள்ளை நிறம் கொண்ட பெண் என்றாலும் இந்த சீரியலுக்காக பிளாக் மேக்கப் போட்டு நடித்திருந்தார். இதுவே இவர் முதல் சீரியலிலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக காரணமாக அமைந்தது.

25
Rachitha Mahalakshmi

இதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான 'இளவரசி' சீரியலில் இரண்டாவது நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த சீரியலில் நடிகை சந்தோஷி கதாநாயகியாக நடிக்க, ஸ்ரீகர் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் சந்தோஷி - ஸ்ரீகரை காதலிக்க துவங்கி நிஜமாகவே திருமணம் செய்து கொண்டனர். இவர்களை போலவே நடிகை ரட்சிதா மகாலட்சுமியும், தன்னுடைய முதல் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் கோபால சுவாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

'அண்ணா' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் இளம் சீரியல் நடிகை! பரபரப்பாகும் கதைக்களம்!

35
Rachitha Mahalakshmi

திருமணத்திற்கு பின்னர் இருவருமே, தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்தி வந்தனர். தினேஷ் சில திரைப்படங்களில் நடிக்க முயன்ற நிலையில்... இவருக்கு திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்காததால், தற்போது வரை சீரியலில் நடித்து வருகிறார். ரட்சிதாவும்... திருமணத்திற்கு பின்னர் சரவணன் மீனாட்சி சீசன் 2, சரவணன் மீனாட்சி சீசன் 3, நாம் இருவர் நமக்கு இருவர் 2, நாட்சியாபுரம், அம்மன் என பல சீரியல்களில் நடித்தார்.

45
Rachitha Mahalakshmi

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். அதே போல் 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ள ரட்சிதா மகாலட்சுமி... பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் ரட்சிதா மகாலட்சுமி... தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெறவேண்டும் என்பதிலும் மும்முரமாக உள்ளார். ஆனால் தினேஷ் தன்னுடைய மனைவியுடன் வாழ விரும்புவதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது உருக்கமாக பேசி இருந்தார்.

கட்டாயப்படுத்தி என்னையும் என் தங்கையையும் உதட்டில் முத்தமிட டார்ச்சர் செய்தனர்! ராதிகா கூறிய அதிர்ச்சி தகவல்!

55
Rachitha Mahalakshmi

ஆனால் தினேஷிடம் இருந்து, பிரிந்து செல்வதில் ரட்சிதா மகாலட்சுமி உறுதியாக உள்ளதால் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்றுள்ளார். இவரின் வாழ்க்கை பிரச்சனை ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருந்தாலும், சமூக வலைத்தளத்தில் செம்ம கூலாக போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது, ரட்சிதா மகாலட்சுமி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ரட்சிதா மகாலட்சுமி BMW பைக்கில் ரக்கட் லுக்கில் செம்ம ஸ்டைலிஷாக போஸ் என்ட்ரி கொடுக்கிறார். இந்த வீடியோ தற்போது படு வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories