படம் பார்க்க கப்பலில் தான் செல்ல வேண்டும்; ஆம் உலகில் முதன்முதலாக கடலில் அமைக்கப்பட்டுள்ள தியேட்டர் பற்றி உங்களுக்கு தெரியுமா இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் என எக்கச்சக்கமான ஓடிடி தளங்கள் நம் கையிலேயே இருந்தாலும், தியேட்டரில் சென்று படம் பார்ப்பது என்பது ஒரு தனி அனுபவம் தான். அதை எந்த ஓடிடி தளத்தாலும் ஈடு செய்ய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அதனால் தான் தியேட்டர்களுக்கான மவுசு இன்னும் குறையவில்லை. தியேட்டரில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை தாண்டி பல விதமான ரசனையுள்ள மக்களுடன் ஒன்றாக அமர்ந்து படம் பார்த்து கத்தி, கைதட்டி என்ஜாய் பண்ணுவது எப்போதுமே தனி சுகம் தான்.
24
Abnormal Theatre
இந்த திரை அனுபவத்தை தாண்டி வேறுவிதமான புதுமையான அம்சங்களுடன் கூடிய திரையரங்கம் தியேட்டரில் உலகின் சில இடங்களில் மட்டும் தான் இருக்கிறது. சும்மா போய் அமர்ந்து படம் பார்ப்பதை தாண்டு வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கக்கூடிய ஒரு அபூர்வமான தியேட்டரை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். அந்த திரையரங்கின் பெயர் ஆர்கிபெலாகோ சினிமாஸ். தாய்லாந்தில் அமைந்துள்ள இந்த தியேட்டர் மிகவும் தனித்துவமானது.
அப்படி என்ன ஸ்பெஷல் என்று தானே யோசிக்கிறீர்கள். இந்த தியேட்டர் நிலப்பரப்பில் இல்லை. இது நடுக்கடலில் அமைந்துள்ளது. இந்த தியேட்டரில் நைட் ஷோ மட்டும் தான் படம் திரையிடப்படுமாம். கடலில் அமர்ந்து படம் பார்த்தால் எப்படி இருக்கும் என யோசிப்பவர்களுக்கான சரியான இடம் தான் இந்த ஆர்கிபெலாகோ சினிமா. தாய்லாந்தில் உள்ள குடு என்கிற தீவில் தான் இந்த விநோதமான திரையரங்கம் அமைந்துள்ளது. கடலுக்கு நடுவே மிதக்கும் ரேப்டில் அமர்ந்து இங்கு படம் பார்க்க முடியும்.
44
Archipelago Cinema theatre
ஒலி ஷீரென் என்கிற ஜெர்மன் ஆர்கிடெக்ட் தான் இந்த திரையரங்கை வடிவமைத்து உள்ளார். தாய்லாந்தில் உள்ள உள்ளூர் வாசிகள் ரேப்டில் மீன் பிடிப்பதை பார்த்து தான் ஏன் கடலில் ரேப்ட் உதவியுடன் தியேட்டர் அமைக்ககூடாது என்கிற ஐடியா ஒலி ஷீரெனுக்கு வந்திருக்கிறது. கடலில் மிதந்தபடி படம் பார்க்க வேண்டும் என்பதால் நாற்காலிகளை தவிர்த்து ரசிகர்கள் அமர பீன் பேக்கை தான் இந்த தியேட்டரில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு இடத்தில் படம் பார்ப்பது நிச்சயம் லைஃப் டைம் அனுபவமாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.