Prashanth
நடிகர் தியாகராஜனின் மகனான பிரசாந்த், வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த பிரசாந்த், அடுத்தடுத்து செம்பருத்தி, ஜீன்ஸ், ஜோடி என தொடர் ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டின் டாப் நடிகராக வலம் வந்தார். இதன் காரணமாகவே அவரை டாப் ஸ்டார் என்றும் அழைக்கத் தொடங்கினர். பின்னர் உடல் எடை கூடியதால் பிரசாந்தின் மார்க்கெட் அதள பாதாளத்துக்கு சென்றது.
Top Star Prashanth
பின்னர் உடல் எடையை குறைத்து கம்பேக் கொடுக்க முடிவெடுத்த பிரசாந்த், தன் தந்தையின் மூலம் பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியதோடு, அப்படத்திற்கு தமிழில் அந்தகன் என பெயரிட்டு அதில் ஹீரோவாகவும் நடித்தார் பிரசாந்த். அது இசையை சம்பந்தமக கொண்டு உருவான படம் என்பதால் அதற்காக பிரத்யேகமாக இசைப்பயிற்சியும் பெற்றார் நடிகர் பிரசாந்த். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தான் இயக்கி இருந்தார்.
இதையும் படியுங்கள்... 100 கோடி ரூபா மதிப்புள்ள வீட்டை விற்றது ஏன்? நடிகை சாந்தி வில்லியம்ஸ் சொன்ன ஷாக்கிங் தகவல்
Prashanth Salary
அந்தகன் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பிரசாந்துக்கு தரமான கம்பேக் படமாகவும் அமைந்தது. அப்படம் வெற்றிபெற்ற கையோடு, பிரசாந்த் நடித்துள்ள மற்றொரு படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அது வேறெதுவுமில்லை, தளபதி விஜய்யுடன் பிரசாந்த் முதன்முறையாக நடித்து கோட் படம் தான். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது.