இந்த அறிக்கை கடந்த வாரம் வெளியானதை தொடர்ந்து, சில சீனியர் நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து மீண்டும் பேச துவங்கியுள்ளது மட்டும் இன்றி, அதனை எப்படி தைரியமாக எதிர்கொண்டனர் என்பது பற்றியும் பேசி வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக நடிகை குஷ்பூ தன்னுடைய பேட்டி ஒன்றில்... தயாரிப்பாளர் ஒருவர் தவறான அணுகு முறையுடன், தன்னுடைய ரூமுக்கு வந்த போது காலில் போட்டிருந்த செருப்பை அவர் முன்பு காட்டி, இங்கு அடிக்கவா அல்லது யூனிட் முன்பு அடிக்கவா என கேட்டதாக அதிர்ச்சி கொடுத்தார்.