கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவங்களில் நடிகை மகாலட்சுமி - தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் ஜோடியின் திருமணமும் ஒன்று. இவர்கள் இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருப்பதியில் இந்த ஜோடியின் திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாப்பிக் ஆக இருந்தது இந்த ஜோடியின் காதல் திருமணம் தான். திருமணத்துக்கு பின் பல்வேறு உருவகேலியையும் சந்தித்தார் ரவீந்தர். அதேபோல் மகாலட்சுமி பணத்துக்காக தான் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
24
Ravindar Mahalakshmi Wedding Anniversary
அந்த விமர்சனங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி தற்போது வெற்றிகரமாக 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது இந்த ஜோடி. இவர்களின் 2வது திருமணநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ஒரு நீண்ட பதிவையும் போட்டுள்ளார் ரவீந்தர். அதில் அவர் கூறி இருப்பதாவது : “இன்னுமாடா நீங்க பிரியலன்னு கேட்கும் உங்களை மறுபடியும் நாங்கள் ஏமாத்திட்டோம். என்னோட நம்பிக்கை, நம்ம வாழ்க்கைல நல்லா இருக்கனும்னு ஒரு கூட்டம் உங்க கிட்ட இருக்கும் வரை அப்புறம் உங்க குடும்பம் உங்க கூட இருக்கும் வரை, எங்கள கிண்டல், உருவகேலி பண்ணி அசிங்கமா பேசுறதில் பயனில்லை.
3 மாசம் தாங்குமா இவங்க கல்யாணம்னு கேட்டவர்களுக்கு என்னுடைய அன்பான பதில் இது என குறிப்பிட்டு தான் தன் மனைவி மகாலட்சுமியோடு தன்னுடைய 2வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ரவீந்தர். தொடர்ந்து மகாலட்சுமி பற்றி பதிவிட்டுள்ள அவர், என்ன சொல்ல கடைசி ஒரு வருவஷம் நிறைய சோதனைகள். எல்லாம் சிறப்பா போகும்போது நிறைய ட்விஸ்ட் மற்றும் வலிகள் நிறைந்ததாக இருந்தது.
அந்த கஷ்டமான சமயத்தில் கூட என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டு நான் உனக்கு வெரைட்டியா சமச்சு போடட்டுமானு கேட்டு என்னுடைய கவலையெல்லாம் மறக்க செய்தாய். மக்களே ஒரு அட்வைஸ்... வாழ்க்கைல பிரிஞ்சி வாழ்ந்தவங்க ஒன்னு சேர்ந்தா, அவங்க புரிஞ்சி வாழ்றது ரொம்ப ஈஸி. நீ உன்னோட வாழ்க்கைய வாழு, அதுவும் உன்னை நேசிப்பவர்களுக்காக வாழு என தத்துவத்துடன் தன் பதிவை நிறைவு செய்துள்ளார் ரவீந்தர். அவரின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருவதை போல் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.