தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கிறார். நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, சந்திரபாபு நாயுடு உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 21 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. அதன்பின்னர் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும் பவன் கல்யாண் நியமிக்கப்பட்டார். அவர் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.