கோலிவுட் குயின்னா சும்மாவா? ஒரே நேரத்தில் தல தளபதியோடு 3 படங்கள் - மாஸ் காட்டும் த்ரிஷா!

First Published | Sep 1, 2024, 11:58 PM IST

Trisha : பிரபல நடிகை த்ரிஷா இப்பொது அஜித்தின் விடாமுயற்சி பட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.

Kollywood queen

கோலிவுட் திரை உலகில் கடந்த 25 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக பயணித்து வருபவர் தான் திரிஷா. பிரசாந்த் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான "ஜோடி" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து, இன்று கோலிவுட் உலகின் "குயின்" என்று அழைக்கப்படும் அளவிற்கு மிகப்பெரிய புகழோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித் மற்றும் தளபதி விஜய் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார்.

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சாமி தரிசனம் செய்த ஜூனியர் என்.டி.ஆர்., ரிஷப் ஷெட்டி!

Vidaamuyarchi

இந்நிலையில் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த ஓராண்டு காலமாக உருவாகி வரும் "விடாமுயற்சி" திரைப்படத்தில் தல அஜித்தின் நாயகியாக திரிஷா நடித்துள்ளார். அதே நேரம் அவர் மலையாள மொழியில் உருவாகி வரும் Identity என்ற திரைப்படத்தில் நடித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. தனது கால் ஷீட்களை மிக நேர்த்தியாக இரண்டு திரைப்படங்களுக்கும் கொடுத்து மாஸ் காட்டி வருகின்றார் நடிகை திரிஷா. 

Tap to resize

Trisha in GOAT

மேலும் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள தளபதி விஜயின் கோட் திரைப்படத்தின் நான்காவது சிங்கிள் பாடலில், நடிகை திரிஷா விஜய்யோடு இணைந்து கேமியோவில் கலக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை என்றாலும், கட்டாயம் கோட் பட நான்காம் சிங்கிள் பாடலில் நடிகை திரிஷா நடித்துள்ளார் என்றே நம்பப்படுகிறது. 

Good Bad Ugly

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தற்பொழுது கிடைத்துள்ள தகவலின்படி, தல அஜித் நடிப்பில் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் "குட் பேட் அக்லி" திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை திரிஷா ஒப்புக்கொண்டுள்ளதாகவும், விரைவில் அந்த ஷூட்டிங் பணிகளில் அவர் இணைவார் என்றும் கூறப்படுகிறது. ஆகவே தலயுடன் 2 படங்கள், மற்றும் தளபதியோடு 1 படம் என்று அசத்தி வருகின்றார் த்ரிஷா.

அதீத திறமை.. உச்சகட்ட புகழ்.. ஆனால் குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை தொலைத்த நடிகைகள்!

Latest Videos

click me!