Published : Sep 01, 2024, 11:33 PM ISTUpdated : Sep 01, 2024, 11:38 PM IST
நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ரிஷப் ஷெட்டி மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் ஆகியோர் இன்று கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை கோவிலுக்கு வருகை தந்தனர். பிரசாந்த் நீலும் ஜூனியர் என்டிஆரும் தங்கள் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தனர்.
மூவரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜூனியர் என்டிஆர் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோர் கோவிலில் தரிசனம் செய்வதையும் ஆசிர்வாதம் பெறுவதையும் படத்தில் காணலாம்.
25
Rishab Shetty in Kolluru Sri Mookambika temple
ஜூனியர் என்டிஆர் ஆகஸ்ட் 31ஆம் தேதி மங்களூரு சென்று, அங்கிருந்து தனது தாயின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக குந்தாபுரா சென்றார். அவர்களுடன் ரிஷப் ஷெட்டி மற்றும் பிரசாந்த் நீல் ஆகியோரும் சேர்ந்து உடுப்பியில் கிருஷ்ணர் கோயிலில் தரிசனம் செய்யச் சென்றனர். அங்கு வாழை இலையில் பரிமாறப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டனர்.
35
Prashant Neel in Kolluru Sri Mookambika temple
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜூனியர் என்.டி.ஆர்., "சொந்த ஊரான குந்தாபுராவிற்கு வந்து உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற என் அம்மாவின் நீண்டநாள் கனவு இன்று நனவாகியுள்ளது! செப்டம்பர் 2ஆம் தேதி அவரது பிறந்தநாளுக்கு முன்னதாக அதை நிறைவேற்றியது ஸ்பெஷலாக உள்ளது." என்று கூறியுள்ளார்.
45
Kolluru Sri Mookambika temple
மேலும், "என்னுடன் இணைந்து இதை சாத்தியமாக்கியதற்காக தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூர் அவர்களுக்கும் எனது அன்பு நண்பர் பிரசாந்த் நீலுக்கும் நன்றி கூறுகிறேன். அவர்கள் உடன் வந்து ஆதரவாக இருந்தது இந்தத் தருணத்தை மிகவும் சிறப்பாக்கியது" எனவும் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.
55
Jr NTR in Devara
'தேவாரா' படத்தின் முதல் பாகம் ரிலீசுக்குத் தயாராகி வருகிறது. ஜூனியர் என்டிஆர் ஜோடியாக பாலிவுட் குயின் ஜான்வி கபூர் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கொரட்டாலா சிவா இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது