தமிழ் சினிமாவில் "நடிகர் திலகம்" என்று சிவாஜிகணேசனை அழைப்பது போல, "நடிகையர் திலகம்" என்று அழைக்கப்பட்ட மாபெரும் நடிகை தான் சாவித்திரி. எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய ஒரு நடிகை. இவரை போல ஒரு லேடி சூப்பர் ஸ்டார் தமிழ் திரை உலகில் இருந்ததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு புகழின் உச்சியில் பயணித்தவர்.
ஆனால், தான் தயாரித்த ஒரு படம் நஷ்டமாக போக, அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. அவருடைய காதல் தோல்வியும் இவருடைய குடி பழக்கத்திற்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பட வாய்ப்புகளை இழந்து, தனது இறுதி நாட்களை மிகவும் கடினமாக கழித்தார் அவர்.
மேடையில் ஆடிய வாரிசு நடிகை.. அருவருக்கத்தக்க செய்கையை செய்த மோகன்லால்!