தெலுங்கு பிக் பாஸ்.. மாஜி மாமனாருக்கு உதவிய சமந்தா - ஒரு சுவாரசிய தகவல் இதோ!

First Published | Sep 1, 2024, 9:29 PM IST

Samantha Ruth Prabhu : பிரபல நடிகை சமந்தா தனது முன்னாள் மாமனாருக்கு செய்த் ஒரு உதவி குறித்து இந்த பதிவில் காணலாம்.

Nagarjuna bigg boss

பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழ் மொழியை போலவே இந்திய மொழிகள் பலவற்றில் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று செப்டம்பர் மாதம் 1ம் தேதி, தெலுங்கு மொழியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த முறை 14 போட்டியாளர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமலுடன் நடித்த ஹீரோயின் இவர்தானா? இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Simon Coolie

ஏற்கனவே ஏழு சீசன்களாக நடந்து வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை, அதன் மூன்றாவது சீசனில் இருந்து பிரபல நடிகர் நாகார்ஜுனா தான் தொகுத்து வழங்கி அசத்தி வருகின்றார். சூப்பர் ஸ்டாரின் "கூலி" திரைப்பட பணிகளை மேற்கொண்டு வரும் நடிகர் நாகார்ஜுனா, இடையிடையே தெலுங்கு பிக் பாஸ் பணிகளையும் இப்போது கவனித்து வருகிறார்

Tap to resize

Ramyakrishnan

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அதன் முதல் சீசனை பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். அதன் பிறகு பிரபல நடிகர் நானி அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கினார். அதன்பிறகு 3வது சீசன் தொடங்கி, கடந்த ஏழாவது சீசன் வரை பிரபல நடிகர் நாகார்ஜுனா இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தாலும், இடையில் தற்காலிகமாக இரண்டு முன்னணி நடிகைகள் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன் மற்றொருவர் நாகார்ஜுனாவின் முன்னாள் மருமகள் சமந்தா.

Samantha Ruth Prabhu

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் நடைபெற்றபோது, இடையே சில வாரம் தனது படப்பிடிப்பு பணிகளால் நாகர்ஜூனாவால் பிக் பாசில் பங்கேற்க முடியாமல் போனது. அப்போது தான் நடிகை சமந்தா அந்த நகழ்ச்சியை எடுத்து நடத்தினார். சமந்தா அந்த நிகழ்ச்சியை எடுத்து நடத்தியபோது வரலாற்று சாதனையாக 11.4 TRP ரேட்டிங் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தான் தனது முன்னாள் மாமனாருக்கு உதவினார் சமந்தா. 

"சூர்யா.. உங்க அன்பிற்கும்.. பாசத்திற்கும் ரொம்ப நன்றி" - வாழ்த்தி பேசிய ரஜினிகாந்த்!

Latest Videos

click me!