Tulasi Shivamani
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தங்கை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகள் என பல முக்கிய ரோல்களில் நடித்தவர் 80ஸ் ஹீரோயின் துளசி சிவமணி. கர்நாடகாவை சேர்ந்த துளசி சிறு வயதிது முதலே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படங்களில் நடித்தார்.
Tulasi Shivamani
பிறகு தெலுங்கில் தங்கை, மகள் போன்ற கேரக்டரில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார். 1982ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான கமலின் சகலகலா வல்லவன் படத்தில் கமலுக்குத் தங்கையாக முக்கியமான கேரக்டரில் நடித்தார்.
Tulasi Shivamani
மெகா ஹிட்டான நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினியின் மகளாக நடித்தார். அந்தப் படத்தில் கார்த்திக்கின் காதலியாகவும் தோன்றுவார். இன்னும் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
Tulasi Shivamani
சாய்பாபா மீது மிகுந்த பக்தி கொண்டவர் துளசி. இதனாலேயே துளசிக்கும் இயக்குனர் சிவமணிக்கும் காதல் ஏற்பட்டது. ஒருநாள் படப்பிடிப்பில் வைத்தே சட்டென்று காதலைச் சொல்லிவிட்டார் இயக்குனர் சிவமணி. துளசியும் உடனே சம்மதித்துவிட்டார். அன்று மாலையே கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இரு வீட்டாருக்கும் சில வாரங்கள் கழித்துதான் இவர்களின் திருமணம் பற்றித் தெரியவந்தது. ஆனால், இரு தரப்பிலும் பிரச்சினை இல்லாமல் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர்.
Tulasi Shivamani
இவர்களுக்கு சாய் தருண் என்ற ஒரு மகன் இருக்கிறார். தெலுங்கு திரையுலகில் இயக்குனராக இருக்கிறார். கல்யாணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு விடை கொடுத்த துளசி மீண்டும் அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
ஆம்பள, ஈசன், பண்ணையாரும் பத்மினியும், வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்களில் முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இப்போது 50 வயதை எட்டியிருக்கும் துளசி சினிமாவில் மட்டுமில்லாமல் டிவி சீரியல்களிலும் நடிக்கிறார். தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி இருக்கிறார்.