மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதையடுத்து ஏ.எல்.விஜய் இயக்கிய தியா படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த அவர் அடுத்தடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2, சூர்யாவின் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்தார். பின்னர் டோலிவுட் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தது. இதனால் டோலிவுட்டில் ராசியான ஹீரோயின் ஆக உருவெடுத்தார் சாய் பல்லவி.
24
Actress Sai Pallavi
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் சாய் பல்லவி. தனக்கு கேரக்டர் பிடிக்கவில்லை என்றால் பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் அதில் நடிக்க மறுத்துவிடுவார். அப்படி விஜய், அஜித், சிரஞ்சீவி போன்ற டாப் ஹீரோக்களின் பட வாய்ப்புகளை உதறித்தள்ளி இருக்கிறார் சாய் பல்லவி. தற்போது அவர் நடிப்பில் தமிழில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சாய் பல்லவி.
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது. இதுதவிர தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக தண்டல் என்கிற படத்திலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி. மேலும் பாலிவுட்டில் உருவாகி வரும் ராமாயணம் படத்திலும் நடிக்கிறார். இதில் ரன்பீர் கபூர் ராமனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
44
Actress Sai Pallavi Lover
இந்த நிலையில், தன்னுடைய 10 வருட காதல் பற்றி சாய் பல்லவி பேசி இருக்கிறார். அதில், மகாபாரதம் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அதில் அர்ஜுனனின் மகனாக வரும் அபிமன்யு கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனாலேயே கடந்த 10 ஆண்டுகளாக அபிமன்யு பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். கடந்த 10 வருடங்களாக அபிமன்யுவை காதலித்தும் வருகிறேன் என சாய் பல்லவி கூறி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதென்ன புதுவிதமான காதலா இருக்கு என கூறி வருகின்றனர்.