சின்னத்திரை சீரியல்களில் நடித்து பேமஸ் ஆனவர் சாந்தி வில்லியம்ஸ். இவரது கணவர் வில்லியம்ஸ் மலையாள திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வந்தார். மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் நெருங்கிய நண்பராக இருந்த வில்லியம்ஸ் போதைக்கு அடிமையாகி உயிரிழந்தார். அதேபோல் சாந்தி வில்லியம்ஸின் மகனும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தான் வாழ்ந்த பிரம்மாண்ட வீட்டை விற்றது பற்றி பேசி இருக்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.
24
Shanthi Williams husband
அதில், என் கணவருக்கு கார்கள் மீது அலாதி பிரியம் உண்டு. எங்கு சென்றாலும் காரில் தான் செல்வார். நிறைய கார்களையும் சொந்தமாக வைத்திருந்தார். ஆனால் அவர் தயாரிப்பாளராக தயாரித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், நிறைய நஷ்டம் ஏற்பட்டது. அதன்காரணமாக நாங்க இருந்த வீட்டையும் விற்க வேண்டிய சூழல் உருவானது. நாங்கள் வாங்கிய கடனுக்காக சென்னை கேகே நகரில் உள்ள வீட்டையும் விற்றோம்.
இப்போ அந்த வீட்டின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும். அந்த வீட்டை விற்ற பின்னர் தங்க வீடின்றி என் நான்கு குழந்தைகளுடன் கஷ்டப்பட்டேன். பின்னர் நான் இழந்தவற்றை மீட்டெடுக்க மீண்டும் நடிக்க தொடங்கினேன். சீரியலில் நடித்து என் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு சம்பாதித்தேன் என கூறிய சாந்தி வில்லியம்ஸ், தன்னுடைய கணவருடன் நெருங்கி பழகிவிட்டு அவர் இறப்பிற்கு கூட வராத நடிகர் மோகன்லாலை நன்றி கெட்டவன் என்றும் சாடி இருந்தார்.
44
Shanthi Williams Slams Mohanlal
ஒரு முறை பெங்களூருவில் ஷூட்டிங்கிற்காக சென்றபோது எனது கணவர் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது என்னிடம் அவர், நான் செத்த பின் மோகன்லால் உன்னை பார்த்துக் கொள்வான் என கூறினாராம். இதைக்கேட்டு கடுப்பான சாந்தி வில்லியம்ஸ், மொதல்ல நீங்க செத்ததுக்கு வருவாங்களானு பாருங்க, என்று மோகன்லால் முன்னாடியே சொன்னாராம். அவர் அன்று சொன்னபடியே வில்லியம்ஸ் மறைவிற்கு மோகன்லால் வரவில்லையாம்.