ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'அண்ணா' . நான்கு தங்கைகளை தாயிக்கு தாயாக இருந்து வளர்க்கும், ஒரு அண்ணனை பற்றிய உன்னதமான கதைக்களத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
24
Mirchi Senthil and Nitya Ram
கடந்த 2023-ஆம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த சீரியலில், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான மிர்ச்சி செந்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக 'நந்தினி' சீரியல் புகழ் நித்யாராம் நடித்து வருகிறார்.
சுமார் 400 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இருந்து கடந்த மாதம் நித்யா மற்றும் மிர்ச்சி செந்தில் விலகுவதாக ஒரு வதந்தி வெளியான நிலையில்... பின்னர் அது வதந்தி என தெரிய வந்தது. இதை தொடர்ந்து, மேலும் இந்த சீரியலில் அடுத்தடுத்து சில புதிய நடிகர் நடிகைகள் இணைந்து வருவதை பார்க்க முடிகிறது.
44
Akshara New Entry
அந்தவகையில் தற்போது நடிகை அக்ஷாரா என்பவர் புதிய என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரியவில்லை. ஆனால் கதைக்களம் முன்பை விட சூடு பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.