"உங்கள் மௌனம் தவறாக சித்தரிக்கப்படும்" மோலிவுட் பிரச்சனை - சூசகமாக ரஜினி விஜயை விளாசிய ராதிகா!

Radhika Sarathkumar : கேரளா திரையுலகில் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாலியல் புகார்கள் பற்றி கடந்த 2 நாட்களாகவே பல தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார் ராதிகா சரத்குமார்.

Hema Committee Report

கேரள முதல்வர் பினராயி விஜயின் தலைமையில் உருவாக்கப்பட்ட, நீதிபதி ஹேமாவின் கமிட்டி, அண்மையில் 223 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கேரள திரையுலகில் பல நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக பல திடுக்கிடும் விஷயங்களை வெளியிட்டது. சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்களிடம், அதற்கு இணையான பாலியல் சேவைகள் கேட்கப்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றது.

"வெயிட்டு பார்ட்டி தான்" பாடகி ஸ்ரேயா கோஷலின் கணவர் 1400 கோடிக்கு அதிபதியாம் - யாருப்பா அவரு?

Actress Radhika

இந்த நாள் வரை கேரள திரையுலகில் உள்ள நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் 18 பேர் மீது, ஒன்பதுக்கும் மேற்பட்ட நடிகைகள் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 1991ம் ஆண்டு முதல் கடந்த 2017ம் ஆண்டு வரை நடந்த பல பாலியல் ரீதியான சம்பவங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த விவகாரம் குறித்து பேசிய பிரபல நடிகை ராதிகா சரத்குமார், கேரளா திரையுலகில், நடிகைகள் பயன்படுத்தும் கேரவன்களில் கூட ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு அவர்களது அந்தரங்கம் படம்பிடிக்கப்பட்டதாக பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டார்.


Super Star Rajinikanth

இந்நிலையில் இன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை ராதிகா பல விஷயங்களை முன் வைத்துள்ளார். குறிப்பாக கேரள விவகாரம் குறித்து ரஜினியிடம் கேட்டபோது, அதற்கு "எனக்கு ஒன்றும் தெரியாது" என்று பதில் அளித்தார். அதை சுட்டிக்காட்டி ராதிகாவிடம் கேள்விகள் கேட்டகப்பட்டது. அப்போது பேசிய அவர் "பெரிய நடிகர்கள் தொடர்ந்து மௌனம் சாதிப்பது அவர்கள் மீது தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்திவிடும். இன்று திரைத்துறையில் உச்ச நடிகராக பயணித்து வரும் அனைவருக்கும் அரசியல் என்ற ஒரு விஷயத்தில் விருப்பம் இருக்கிறது." 

Mollywood actress issue

"நீங்கள் அரசியலில் இணைந்து மக்களுக்கு நல்லது செய்யும் முன், உங்களோடு இணைந்து பணியாற்றும் நமது நடிகைகளுக்காக குரல் கொடுங்கள். அதுதான் மிகவும் முக்கியம்" என்றார் அவர். தொடர்ந்து பேசிய அவர் "நடிகர் சங்கம் என்ன செய்கின்றது என்பது தெரியவில்லை, அதேபோல பிரபல நடிகைகள் மட்டும் அல்லாமல், சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் பாதுகாப்பது கொடுக்கப்பட வேண்டும். இது நிச்சயம் அந்த திரைப்படத்தை தயாரிக்கும், தயாரிப்பு நிறுவனத்தின் பொறுப்பு தான். இதைப்பற்றி நான் தயாரிப்பாளர் சங்கத்திலும் கூட பேசியுள்ளேன். நடிகைகளுக்கு பாதுகாப்பான கேரவன், பாதுகாப்பான கழிப்பறை வசதி போன்றவற்றை தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய பொறுப்பில் எடுத்துக்கொண்டு செய்து தர வேண்டும் என்றும்" அவர் கேட்டுக்கொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் வயிற்றை காட்டியபடி.. தீபிகா படுகோன் வெளியிட்ட பிரக்னன்சி போட்டோ ஷூட்!

Latest Videos

click me!