Venkat Prabhu, Thalapathy Vijay
நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. கோட் படத்தில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
பட்ஜெட்
நடிகர் விஜய்யின் கெரியரிலேயெ அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்றால் அது கோட் தான். இப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. தாய்லாந்து, ரஷ்யா, துருக்கி உள்பட பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் தரத்தில் சண்டைக்காட்சிகளும் கோட் படத்தில் இடம்பெற்று உள்ளது.
சம்பளம்
கோட் படத்தின் பட்ஜெட்டில் பாதி நடிகர் விஜய்க்கு சம்பளமாக கொடுக்கப்பட்டு உள்ளது. கோட் படத்திற்காக நடிகர் விஜய் ரூ.200 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். இதை அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே பேட்டி ஒன்றில் ஓப்பனாக கூறிவிட்டார். எஞ்சியுள்ள 200 கோடியில் தான் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
De Ageing in GOAT Movie
விஜய் இரட்டை வேடம்
நடிகர் விஜய் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கடைசியாக பிகில் படத்தில் அவ்வாறு நடித்த விஜய், அதன்பின்னர் கோட் படத்திற்காக தந்தை, மகன் என இரட்டை வேடம் ஏற்றிருக்கிறார். இதில் வயதான விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், இளம் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரியும் நடித்துள்ளனர்.
டீ ஏஜிங்
கோட் படத்தில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் அப்படத்தில் டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு உள்ளது தான். இதற்காக அமெரிக்காவில் உள்ள பிரபல விஎப் எக்ஸ் நிறுவனம் தான் கோட் படத்தின் டீ ஏஜிங் வேலைகளை பார்த்திருக்கிறது. டீ ஏஜிங் செய்யப்பட்ட விஜய்யின் இளம் வயது கதாபாத்திரம் படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.
இசை
கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய் படத்திற்கு கடைசியாக புதிய கீதை படத்தில இசையமைத்த யுவன் சங்கர் ராஜா அதன் பின்னர் சுமார் 22 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தான் இந்த கோட். இப்படத்தின் பின்னணி இசை வேறலெவலில் வந்திருக்கிறதாம்.
இதையும் படியுங்கள்... வட சென்னை படத்தில் வரும் ‘கார்குழல் கடவையே’ பாடலுக்கு பின்னணியில் இப்படி ஒரு வரலாறு ஒளிஞ்சிருக்கா!!
GOAT Movie Vijay
பாட்டு
கோட் படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு ஆரம்பத்தில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் போகப்போக ரசிகர்கள் அப்பாடல்களுக்கு வைப் செய்ய தொடங்கிவிட்டனர். படம் பார்த்த பின்னர் வேறலெவலில் கொண்டாடுவார்கள் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
பாடகர் விஜய்
நடிகர் விஜய் சிறப்பாக பாடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் இதுவரை நிறைய படங்களுக்கு பாடினாலும், ஒரு படத்தில் ஒரு பாடல்களுக்கு மேல் பாடியதில்லை. அந்த ரெக்கார்டை கோட் படத்தில் முறியடித்துள்ளார். அவர் இப்படத்தில் இடம்பெற்ற விசில் போடு, சின்னஞ் சிறு கிளியே போன்ற பாடல்களை பாடினார்.
பவதாரிணிக்கு உயிர்கொடுத்த AI
இசையமைப்பாளர் யுவனின் சகோதரி பவதாரிணி உயிரோடு இருக்கும்போதே அவரை கோட் படத்தில் பாட வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து அத்றகாக ட்யூனெல்லாம் கம்போஸ் செய்திருக்கிறார் யுவன். ஆனால் அந்த ட்யூன் கம்போஸ் செய்து முடித்ததும் பவதாரிணி இறந்துவிட்டார். இருந்தாலும் அவரை எப்படியாவது பாட வைக்க வேண்டும் என முடிவு செய்து ஏஐ மூலம் பவதாரிணி குரலில் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.
GOAT Movie Release
5000 திரைகளில் ரிலீஸ்
கோட் திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி சோலோவாக ரிலீஸ் ஆகிறது. அப்படத்திற்கு போட்டியாக தமிழில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் 1100 திரைகளிலும், உலகளவில் 5000 திரைகளிலும் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாம். இதை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறி இருந்தார்.
வில்லன் யார்?
கோட் படத்தில் நடிகர் மோகன் வில்லனாக நடித்திருக்கிறார் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் ட்ரைலரிலும் அவர் வில்லன் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்கள். ஆனால் சமீபத்திய பேட்டியில், கோட் படத்தில் சர்ப்ரைஸாக ஒரு வில்லன் இருப்பதாக கூறி வெங்கட் பிரபு ட்விஸ்ட் வைத்துள்ளார்.
Interesting Facts of GOAT Movie
கோட் பட தலைப்பு மாற்றம்
கோட் படத்திற்கு முதலில் காந்தி என டைட்டில் வைக்கலாம் என்கிற ஐடியாவில் வெங்கட் பிரபு இருந்தாராம். ஏனெனில் இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பெயர் காந்தி. ஆனால் அந்த தலைப்புக்கு அனுமதி கிடைக்காததால் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என மாற்றிவிட்டாராம் வெங்கட் பிரபு.
FDFS எப்போது?
கோட் படத்தின் முதல் காட்சி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் 4 மணிக் காட்சிக்கு அரசு அனுமதி அளிக்காததால், அப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது.
ஹைப் இல்லை
கோட் படம் பெரியளவில் ஹைப் இல்லாமல் ரிலீஸ் ஆக உள்ளது. லியோ படத்துக்கு மிகப்பெரிய அளவில் ஹைப் ஏற்றிவிட்டதால் அது சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அது கோட் படத்திற்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக ஆடியோ லாஞ்சே நடத்தாமல் அப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.
இதையும் படியுங்கள்... ஆபாச படத்தில் நடித்து தவறு செய்துவிட்டேன்! விவாகரத்து குறித்து முதல் முறையாக மனம் திறந்த ஸ்வர்ணமால்யா!