சத்யா - ஜெஃப்ரி எண்ட்ரியால் அரண்டு போன அர்னவ்; ஜால்ராஸ் கொடுத்த செம நோஸ்கட்!

First Published | Jan 13, 2025, 2:35 PM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் ரீ-எண்ட்ரி கொடுத்த சத்யா மற்றும் ஜெஃப்ரி, தங்களை தரக்குறைவாக பேசிய அர்னவ்வுக்கு செம நோஸ்கட் கொடுத்துள்ளனர்.

Arnav vs Sathya and Jeffry

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பொங்கல் கொண்டாட்டத்திற்காக எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் எண்ட்ரி கொடுத்துள்ளனர். இதில் கடந்த வாரம் 8 போட்டியாளர்கள் உள்ளே வந்த நிலையில், இந்த வாரம் எஞ்சியுள்ள போட்டியாளர்கள் எண்ட்ரி கொடுத்துள்ளனர். எலிமினேட் ஆன போட்டியாளர்கள் உள்ளே வந்து வன்மத்தை கொட்டி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த வாரம் முழுக்க இது நடந்த நிலையில், இந்த வாரமும் அதே சம்பவம் தொடர்கிறது.

Sathya and Jeffry Re Entry

அந்த வகையில் இந்த வாரம் முதல் ஆளாக தர்ஷிகா உள்ளே எண்ட்ரி கொடுத்ததும் விஷால் லவ் மேட்டரை இழுத்து, ரவீந்தர் அவரிடம் வம்பிழுக்க அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சத்யா மற்றும் ஜெஃப்ரி உள்ளே வந்ததும் அவர்கள் தங்கள் பங்கிற்கு அர்னவ்வை வச்சி செய்துள்ளனர். ஏனெனில் கடந்த வாரம் அர்னவ் எண்ட்ரி கொடுத்தபோது ஒருத்தன் சட்ட போடாம சுத்துவானே என சத்யாவையும், ஒருத்தன் தடவிக்கிட்டு, நோண்டிகிட்டு இருப்பானே என ஜெஃப்ரியையும் தரக்குறைவாக பேசி இருந்தார்.

இதையும் படியுங்கள்... முறைத்த விஷால்; உள்ளே வந்ததும் சண்டைபோட்ட தர்ஷிகா - களேபரம் ஆன பிக் பாஸ் வீடு

Tap to resize

Bigg Boss Tamil season 8 contestants

அதுமட்டுமின்றி சத்யா, ஜெஃப்ரி, விஷால், அருண் ஆகியோரை ஜால்ராஸ் எனவும் நக்கலாக கிண்டலடித்து பேசிய அர்னவ்விற்கு இந்த வாரம் எண்ட்ரி ஆனதும் சத்யா மற்றும் ஜெஃப்ரி இருவரும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். குறிப்பாக சத்யா சட்டை பட்டனை கழட்டிவிட்டு வந்ததை சுட்டிக்காட்டிய ஜெஃப்ரி, பட்டனை போடு, என கலாய்க்க அதை சுற்றி இருந்த சக போட்டியாளர்கள் எல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Arnav vs Jeffry

பின்னர் ஜெஃப்ரி தன் மீது கைவைத்ததும் தட்டிவிட்டு, என்னை தடவாம இருடா என்று சத்யா சொல்ல பிக் பாஸ் வீடே சிரிப்பலையில் மூழ்கியது. பின்னர் அர்னவ்வை பார்த்து உங்க சைஸுக்கெல்லாம் மரியாதை இல்ல வயசுக்கு தான் மரியாதை என ஜெஃப்ரி சொன்னதும் அவரை தடுத்த சத்யா, அவன்கிட்ட பேசி ஏண்டா டைம் வேஸ்ட் பண்ற, அவ எந்த சீசன்ரா என கேட்டு செம நோஸ் கட் கொடுக்க, பின்னர் சக போட்டியாளர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வேறு டாப்பிக் பேசுமாறு கேட்டுக்கொண்டனர். சத்யா மற்றும் ஜெஃப்ரியின் எண்ட்ரியை பார்த்ததும் அரண்டு போனது புரோமோவிலேயே அப்பட்டமாக தெரிந்தது.

இதையும் படியுங்கள்...பிக் பாஸ் டைட்டில் மிஸ் ஆனாலும், வெயிட்டான சம்பளத்துடன் எலிமினேட் ஆன தீபக்!

Latest Videos

click me!