
விடாமுயற்சி:
தல அஜித் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்த திரைப்படம், 'விடாமுயற்சி'. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தில், அர்ஜுன் சர்ஜா, ரெஜீனா,ஆரவ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகிய நிலையில், இந்த மாதம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
வீர தீர சூரன் பார்ட் 2:
இயக்குனர் SU அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வீர தீர சூரன்'. இதுவரை முதல் பாகம் வெளியான பின்னரே இரண்டாம் பாக படங்கள் வெளியானது. ஆனால் 'வீர தீர சூரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை முதலில் ரிலீஸ் செய்து விட்டு, அதன் பின்னர் முதல் பாகத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. கடைசியாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் , விக்ரம் நடித்து வெளியான 'தங்கலான்' ரசிகர்களை ஏமாற்றி இருந்தாலும், 'வீர தீர சூரன்' விக்ரமுக்கு வெற்றிகொடுக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 30-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
விஜய் மகன் சஞ்சய்க்கு அஜித் கொடுத்த வாக்கு; படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்பே இப்படி ஒரு பிரச்சனையா?
குட் பேட் அக்லீ:
இந்த ஆண்டு ரசிகர்களுக்கு டபுள் விருந்தாக, அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் அஜித் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'குட் பேட் அக்லீ' திரைப்படம், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை த்ரிஷா தான் இந்த படத்திலும், அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ரெட்ரோ:
கங்குவா படத்தின் தோல்வி, சூர்யாவை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நிலையில்... தற்போது சூர்யா தன்னுடைய அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யா கேங் ஸ்டாராக கலக்கியுள்ள இந்த படத்தில், ரொமான்டிக் ஹீரோவாகவும் தன்னை பிரதிபலிக்க செய்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் தொழிலாளர் தினமான மே 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
மினி கோடம்பாக்கமாக மாறிய துபாய்! அஜித்தின் கார் ரேஸை பார்க்க படையெடுத்து வந்த கோலிவுட்!
தக் லைஃப் :
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் தான் தக்க லைஃப். நாயகன் படத்திற்கு பின்னர் மணிரத்னம் மற்றும் கமல் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தில், சிம்பு, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம், ஜூன் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கூலி:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் கூலி. கோல்து ஸ்மங்லிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், ஒரு தரமான பான் இந்தியா படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, கன்னட சூப்பர் ஸ்டார் உப்பேந்திரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
எதிர்பாராத எலிமினேஷன்; டைட்டில் வின்னர் கனவோடு இருந்தவரை கண்ணீரோடு வெளியேற்றிய பிக்பாஸ்!
தளபதி 69:
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் தான் தளபதி 69. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் பூஜை போடப்பட்டு, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். கூடிய விரைவில் இந்த படத்தின் மற்ற பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படம் அக்டோபர் 17-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.