விஜய் மகன் சஞ்சய்க்கு அஜித் கொடுத்த வாக்கு; படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்பே இப்படி ஒரு பிரச்சனையா?

Published : Jan 13, 2025, 11:06 AM ISTUpdated : Jan 13, 2025, 11:21 AM IST

தளபதி விஜய் மகனுக்கு அஜித் கொடுத்த வாக்குறுதி குறித்த தகவலை தற்போது பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  

PREV
15
விஜய் மகன் சஞ்சய்க்கு அஜித் கொடுத்த வாக்கு; படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்பே இப்படி ஒரு  பிரச்சனையா?
Actor Vijay

தமிழ் சினிமாவில் ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் தளபதி விஜய். முன்னணி நடிகராக இருக்கும் போதே, அதிரடியாக அரசியலில் கால் பதித்துள்ளார். விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 69 திரைப்படம் தான், அவருடைய கடைசி திரைப்படம் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தளபதி 69-  திரைப்பட பணிகள் ஒருபுறம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, அரசியல் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

25
Jason Sanjay Vijay to direct Sundeep Kishan

கடந்த ஆண்டு விஜய்யின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டியில் நடந்த நிலையில்... மற்ற அரசியல் கட்சியினருக்கே இவருடைய எழுச்சி பயத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. காரணம் விஜய்யை ஆதரித்து லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூடினர். கூடிய விரைவில் தன்னுடைய இரண்டாவது மாநாட்டையும் விஜய் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 

விஜய்யின் அரசியல் பணி காரணமாக அவர் குடும்பத்தின் மீது அதிக அக்கறை காட்டுவது இல்லை என்கிற ஒரு வதந்தி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டு வருகிறது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான விஷயங்களும் நடக்கின்றன. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படம் இயக்குவதை உறுதி செய்தபோது, விஜய் கலந்து கொள்ளவில்லை என்றாலும், பின்னர் தன் தந்தையை சந்தித்து ஆசி வாங்கிய புகைப்படங்கள் வெளியாகின.

எதிர்பாராத எலிமினேஷன்; டைட்டில் வின்னர் கனவோடு இருந்தவரை கண்ணீரோடு வெளியேற்றிய பிக்பாஸ்!
 

35
Sundeep Kishan to star in Jason Sanjay Movie

மேலும், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக வைத்து படம் இயக்க, பல இயக்குனர்கள் தயாராக இருந்த போதும்... தன்னுடைய தாத்தாவைப் போல் ஒரு இயக்குனராக தான் மாறுவேன் என அதற்கான படிப்பை வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு தன்னுடைய கதையை எழுதி முடித்துள்ளார். இந்த படத்தின் கதை குறித்து சமீபத்தில் கூறிய இசையமைப்பாளர் தமன், விஜயின் மகன் எழுதிய இந்த கதையில் பெரிய ஹீரோக்கள் கூட நடிக்க ஓகே சொல்லுவார்கள். ஆனால் தன்னுடைய கதைக்கு சந்தீப் கிஷன் தான் சரியாக இருப்பார் என ஜேசன் சஞ்சய் முடிவு செய்து அவரை நடிக்க வைக்க உள்ளார். இந்த திரைப்படம் உண்மையிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும் என தெரிவித்தார். அதே போல் ஜேசன் சஞ்சய் கதை தன்னை ஆச்சர்யப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

45
Jason Sanjay First Movie Official Announcement

விஜய் மகன் இயக்க உள்ள திரைப்படத்தின் அறிவிப்பு, கடந்த 2023 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவர் இயக்கும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.   இந்நிலையில் தான் விஜய்யின் மகன் இயக்கும் படத்திற்கு அஜித் உதவுவதாக வாக்கு கொடுத்த தகவலை பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.

விஜய் டிவி சீரியல் வில்லி நடிகை ஸ்ரேயாவுக்கு நடந்த நிச்சயதார்த்தம்! வைரல் போட்டோஸ்!
 

55
Ajith Kumar Help Jason Sanjay

படப்பிடிப்பை தொடங்குவதில் லைகா நிறுவனம் தொடர்ந்து, காலம் தாழ்த்தி வந்த நிலையில்... விஜய்யின் மகன் வெக்ஸ் ஆகி, தன்னுடைய நலன் விரும்பியான சுரேஷ் சந்திராவுக்கு போன் செய்து, வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை அணுகலாமா என கேட்டுள்ளார். அந்த சமயம் அஜித் அவர் அருகே இருந்த நிலையில், யார் என கேட்ட அஜித், விஜய்யின் மகன் தான் கூறியுள்ளார். போனை வாங்கி, நலம் விசாரித்த அஜித், உன்னுடைய படத்திற்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன். வேறு தயாரிப்பு நிறுவனத்தை அணுகலாமா? என கேட்டுள்ளார். பின்னர் லைகா சஞ்சையிடம் பேசியதாக கூறப்படுகிறது. அந்தணன் கூறிய இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories