Unreleased Tamil Movies
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படம் சுமார் 12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் ரிலீஸ் ஆகி உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்படத்தை போல் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் தமிழ் படங்கள் பற்றி பார்க்கலாம்.
Dhruva Natchathiram
துருவ நட்சத்திரம்
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்த படம் துருவ நட்சத்திரம். இப்படத்தில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், டிடி, ராதிகா, விநாயகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நிதிப்பிரச்சனை காரணமாக கடந்த 2017-ம் ஆண்டே இப்படத்தை எடுத்து முடித்தும் ரிலீஸ் செய்யாமல் உள்ளார் கெளதம் மேனன்.
Naragasooran
நரகாசூரன்
துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் நரகாசூரன். இப்படத்தில் அரவிந்த் சாமி, ஆத்மிகா, ஷ்ரேயா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை கெளதம் மேனன் தயாரித்து இருந்தார். இப்படமும் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது.
party
பார்ட்டி
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் பார்ட்டி. இதில் மிர்ச்சி சிவா, ஜெய், சத்யராஜ், நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை டி.சிவா தயாரித்துள்ளார். பிஜி தீவில் இப்படத்தை படமாக்கியதற்கான வரியை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் இப்படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
இதையும் படியுங்கள்... முதல் நாளிலேயே வணங்கான் படத்தைவிட டபுள் மடங்கு வசூல் அள்ளிய மதகஜராஜா!
Idam Porul Yaeval
இடம் பொருள் ஏவல்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் இடம் பொருள் ஏவல். இப்படத்தை சீனு ராமசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷால், நந்திதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படமும் எடுத்து முடித்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
server sundaram
சர்வர் சுந்தரம்
நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் கிளாசிக் ஹிட் அடித்ததை போல் தன் படமும் ஹிட் ஆகும் என்கிற எண்ணத்தில் சந்தானம் நடித்த படம் தான் சர்வர் சுந்தரம். இதில் சமையல் கலைஞராக சந்தானம் நடித்திருக்கிறார். செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படமும் எடுத்து முடிக்கப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாக முடங்கிக் கிடக்கிறது.
Rendavathu Padam
ரெண்டாவது படம்
தமிழ் படத்தின் இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்கியுள்ள படம் தான் ரெண்டாவது படம். இப்படத்தில் விமல் நாயகனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படமும் எடுத்து முடித்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் சில பிரச்சனைகளால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
Sathuranga Vettai 2
சதுரங்க வேட்டை 2
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட திரைப்படங்களில் சதுரங்க வேட்டை 2 திரைப்படமும் ஒன்று. இதன் முதல் பாகம் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை திரிஷா, அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து பிரம்மாண்டமாக எடுத்திருந்தனர். ஆனால் இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இதையும் படியுங்கள்... கேம் சேஞ்சர் vs வணங்கான் vs மதகஜராஜா! பொங்கல் வின்னர் யார்?