தீபாவளி பண்டிகை என்றாலே கண்டிப்பாக புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும். அதுவும் பெரிய நடிகர்களின் படங்கள் தான் வரிசைகட்டி ரிலீஸ் ஆகும். அப்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், அதற்குள் அதற்கான போட்டி தற்போதே தொடங்கிவிட்டது. அந்த வகையில், தீபாவளி ரேஸில் முதலாவதாக களமிறங்கிய திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார்.
23
Amaran Diwali Release
அமரன் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் என்கிற ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர். இதில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 31ந் தேதி திரைக்கு வர உள்ளது.
தீபாவளி ரேஸில் முதல் ஆளாக களமிறங்கிய சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தற்போது ஜெயம் ரவி படம் ஒன்று களத்தில் குதித்துள்ளது. எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள பிரதர் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சீதா, சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ், பூமிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.