நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. அப்படத்தின் முதல் பாகம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. கங்குவா திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். அப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணியாற்றி இருக்கிறார்.
24
kanguva suriya
கங்குவா பான் இந்தியா திரைப்படமாக தயாராகி உள்ளது. மொத்தம் 10 மொழிகளில் கங்குவா திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. அதுமட்டுமின்றி முழுக்க முழுக்க இப்படத்தை 3டி-யில் படமாக்கி உள்ளனர். கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். மேலும் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது.
கங்குவா படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பேண்டஸி கதையம்சம் கொண்ட வரலாற்று திரைப்படமான இது நடிகர் சூர்யாவின் கெரியரில் மிக முக்கிய படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படம் பற்றிய அப்டேட்டுகளும் வரிசையாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அப்படி லேட்டஸ்டாக வெளியான ஒரு ஹாட் அப்டேட் தான், நடிகர் கார்த்தி கங்குவா படத்தில் நடிக்கும் விஷயம்.
44
Bobby Deol
இந்த நிலையில், கார்த்தி கங்குவா படத்தில் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்கிற தகவலும் தற்போது கசிந்துள்ளது. அவர் வில்லன் பாபி தியோலின் மகனாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகனாக நடித்திருக்கிறார். இதனால், கார்த்தி கங்குவா படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்திருக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் தான் கார்த்தி வரும் காட்சிகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.