Vijay: ஆசை ஆசையாக வாங்கிய நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு; விலை தெரியுமா?

First Published | Aug 1, 2024, 11:28 PM IST

நடிகர் விஜய் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் விற்பனைக்கு வந்துள்ளது. 

வரி பிரச்சினை

திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய்க்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் மட்டும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. காரணம் அதன் வரி தான். 2012ம் ஆண்டு ஒரு புதிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கிய விஜய்க்கு 137 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

அபராதம் விதிப்பு

இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தவில்லை என்று கண்டித்த நீதிபதி, ரீல் ஹீரோவாக மட்டும் இருக்காதீர்கள், ரியல் ஹீரோவாகவும் இருங்கள். வரி என்பது நன்கொடை கிடையாது, அது ஒரு கட்டாய பங்களிப்பு என்று குறிப்பிட்டு விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tap to resize

கார் விற்பனைக்கு

Empire Autos எனும் கார் டீலர்ஷிப்பில் விஜய் பயன்படுத்திய கார் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் படம் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்ட செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பீஸ்ட் குழுவினருடன் விஜய்

நடிகர் விஜய்யிடம் மினி கூப்பர், இனோவா, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பல உயர் ரக கார்கள் இருந்தாலும், இந்த காரை மட்டும் விஜய் தான் ஓட்டிச் செல்வாராம். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பின்னர் இந்த காரில் தான் இயக்குநர் நெல்சன், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், ஹீரோயின் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் என படக்குழுவினரை காரில் ஏற்றி ஒய்யாரமாக வலம் வந்தார்.

காரின் விலை

இந்த கார் தற்போது ரூ.2.6 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை நிரந்தரமானது கிடையாது என்று குறிப்பிட்டுள்ள விற்பனை நிறுவனம் வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Latest Videos

click me!