Director Thangar Bachan insults Kausalya
90s காலத்தில் தமிழ் சினிமாவில் நடித்து வந்த பிரபல நடிகைகளில் ஒருவர் கௌசல்யா. கார்த்திக், பிரபுதேவா, முரளி, விஜய் என பல முன்னணி ஹீரோக்களுன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
Actress Kausalya
காலமெல்லாம் காதல் வாழ்க படத்தன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த கவிதா அதற்குப் பிறகு தன் பெயரை கௌசல்யா என்று மாற்றிக்கொண்டார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
Kausalya movies
இப்போதும் பல படங்களில் அக்கா, அண்ணி ரோல்களில் நடித்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
Kausalya first movie
அந்தப் பேட்டியில் அவர் கடந்து வந்த மோசமான சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்துள்ளார். "இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கிய ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு காட்சியில் அவர் சொல்லிக் கொடுத்ததை மாதிரி என்னால் செய்ய முடியவில்லை. உடனே அவர், 'இந்த குரங்கு மூஞ்சிய வச்சிக்கிட்டு நீ எல்லாம் எதுக்கு நடிக்க வந்த' என்று திட்டினார். எல்லோரும் முன்பும் என்னை அவர் அவமானப்படுத்தியது வருத்தமாகதான் இருந்தது" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
Thangar Bachan insults Kausalya
"நாம் தான் சரியாக வேலை செய்யவில்லை, நான் சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்து அவர் திட்டிய இருக்கிறார் என்று நினைத்து அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அதிலிருந்து சரியாக வேலை செய்யாவிட்டால் திட்டுவார் என்ற பயம் வந்துவிட்டது" என்றும் கவுசல்யா தெரிவித்துள்ளார்.
Kausalya about Director Thangar Bachan
இந்த சம்பவம் எந்த காட்சியில் நடிக்கும்போது நடந்தது என்று நினைவுக்கு வரவில்லை என்றும் கௌசல்யா தெரிவித்துள்ளார். ஆனால், திட்டியதை மட்டும் எப்போதும் என்னால் மறக்க முடியாது எனவும் சொல்லியிருக்கிறார்.
Thangar Bachan Kausalya movies
கௌசல்யாவின் இந்த ஓபன் டாக் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலரும் அவருக்கு ஆதரவாகக் கருத்து கூறி வருகிறார்கள். இயக்குநர் தங்கர் பச்சானையும் கடுமையாகக் கண்டிக்கின்றனர்.