இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமீப காலமாகவே... பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதை தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து சென்னையில் உள்ள PSBB பள்ளியில் நடந்த கல்ச்சுரல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதே போல் ஜெயம் ரவி-யிடம் சில மாணவர்கள் ஆட்டோகிராப் கேட்ட போது அவர் போட்டுக்கொடுத்துள்ளார். இந்த புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.
அதே போல் ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பின்னர்... தற்போது அடுத்தடுத்து நான்கு படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். நயன்தாராவுடன் நடித்துள்ள இறைவன் திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.