
தெலுங்குத் திரையின் காதல் நாயகனாக வலம் வந்தவர் சோபன் பாபு. சொக்காடு படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான சோபன் பாபுவுக்கு அப்படத்தின் மூலம் நிறைய பெண் ரசிகைகளும் கிடைத்தனர். அதன் பின்னர் அந்த காலத்து சாக்லேட் பாய் ஆக தெலுங்கு திரையுலகில் வலம் வந்தார் சோபன் பாபு. மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்தவரான சோபன் பாபு, நாடகங்களில் நடித்து தன்னுடைய திறமையை மெருகேற்றிக் கொண்டார். பின்னர் சினிமாவுக்குள் நுழைந்த சோபன் பாபு சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
குறிப்பாக என்.டி.ஆர் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்த சோபன் பாபு, படிப்படியாக ஹீரோவாக உயர்ந்தார். பின்னர் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து காதல் நாயகனாக உருவெடுத்தார் சோபன் பாபு. அவர் ஹீரோவானதற்கு முன் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார். அதில் ஒரு சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
சோபன் பாபு மிகவும் நேசித்த, மதித்த நடிகைகளில் ஜெயலலிதாவும் ஒருவர். ஆனால் அவரின் தாயாரால் சோபன் பாபு அவமானப்படுத்தப்பட்டுள்ளார். அதுவும் சாதாரணமாக அல்ல, நிறத்தை சுட்டிக்காட்டி அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான கிருஷ்ணா நடித்த முதல் துப்பறியும் படம் `குடாச்சாரி 116`. இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தது சோபன் பாபு தான். இதில் சோபன் பாபுவுக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தனர். ஜெயலலிதா அப்போதுதான் சினிமாவிற்குள் நுழைந்து படிப்படியாக வளர்ந்து வந்தார்.
ஆனால் அவரது தாயார் சந்தியா பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் சற்று ஆதிக்கத்தோடு இருந்தார். `குடாச்சாரி 116` படப்பிடிப்புத் தளத்திற்கு ஜெயலலிதாவுடன் அவரது தாயாரும் வந்தார். கதாநாயகன் யார் என்று கேட்டதும், சோபன் பாபுவை தயாரிப்பாளர் காட்டி இருக்கிறார். அப்போது எதோ வேலை செய்துவிட்டு வந்த சோபன் பாபு முகத்தில் எண்ணெய் வழிய, வெயிலில் சற்று நிறம் குறைவாகக் காணப்பட்டார். சோபன் பாபுவைப் பார்த்த ஜெயலலிதாவின் தாயார், "என் மகளின் நிறம் என்ன? அவரது நிறம் என்ன? அவர் ஜோடியாக என் மகள் நடிப்பதா?" என்று காட்டமாக பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... அடேங்கப்பா... ஜெயலலிதா சொந்த குரலில் இத்தனை சூப்பர் ஹிட் பாடலை பாடி இருக்கிறாரா?
ஹீரோவை மாற்றினால் மட்டுமே என் மகள் நடிப்பார், இல்லையென்றால் வேறு கதாநாயகியைப் பாருங்கள் என்று கறாராக கூறி இருக்கிறார். அதுவும் சோகன் பாபு முன்னிலையிலேயே அவர் இப்படி பேசி இருக்கிறார். ஹீரோ ஆகிவிட்டோம் என்கிற உற்சாக மிகுதியில் இருந்த சோபன் பாபுவுக்கு ஜெயலலிதா தாய் சொல்லிய சொல் பேரிடியாக அமைந்தது. அதன்பின்னர் வேறுவழியின்றி அப்படத்தில் இருந்து சோபன் பாபுவை நீக்கிவிட்டு கிருஷ்ணாவை நடிக்க வைத்திருக்கின்றனர்.
ஜெயலலிதாவின் தாயார் சந்தியா தன்னை அவமானப்படுத்தி பேசிய வார்த்தைகள், சோபன் பாபுவின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அதன்பின்னர் தன்னுடைய விடாமுயற்சியால் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து பெரிய வெற்றிகளைப் பெற்றார் சோபன் பாபு. தனக்கு யார் வாய்ப்பு தருவார்கள் என்ற நிலையில் இருந்து, தனது கால்ஷீட்டுக்கு தயாரிப்பாளர் காத்திருக்கும் அளவுக்கு உயர்ந்தார்.
இந்தச் சூழலில் தம்மாரெட்டி பாரத்வாஜ் ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்தார். சோகன் பாபு கதாநாயகன். அதில் கதாநாயகி தேர்வு செய்யப்படாமல் இருந்த நிலையில், ஜெயலலிதா என்ற புதிய பெண் நன்றாக நடிப்பார் என்று படக்குழுவிடம் பரிந்துரை செய்திருக்கிறார் சோபன் பாபு.
அந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கும் சோபன் பாபு மீது ஒரு சாஃப்ட் கார்னர் ஏற்பட்டு அவரும் நடிக்க சம்மதித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். சோபன் பாபுக்கு ஏற்கனவே மனைவி, குழந்தைகள் இருந்தபோதும் அவர் மீது ஜெயலலிதாவுக்கு ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது. இப்படி தன்னை அவமானப்படுத்தியவரையே தன் பின்னால் வர வைத்து அவரை சோபன் பாபு பழிவாங்கியதாக மூத்த பத்திரிகையாளர் இம்மண்டி ராமராவ் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... பிளாஷ்பேக் : கருப்பு பணம் வாங்கிய ரஜினிகாந்த்... கண்டுபிடித்த ஜெயலலிதா - சூப்பர்ஸ்டார் கொடுத்த நச் விளக்கம்